உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தக் லைப் படத்துக்கு ஒரு நாள் சிறப்பு காட்சி

தக் லைப் படத்துக்கு ஒரு நாள் சிறப்பு காட்சி

சென்னை:கமல், சிம்பு, த்ரிஷா நடித்துள்ள, 'தக் லைப்' படத்தை, மணிரத்னம் இயக்கி உள்ளார். படம் இன்று, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது. கர்நாடகாவில் இப்படம் வெளியாகவில்லை. பெரிய நடிகர்களின் படம் வெளியாகும் போது, சிறப்பு காட்சிக்கு, அரசிடம் அனுமதி கோரப்படும். அதன்படி தக் லைப் படத்திற்கும். சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி, அரசிடம் கடிதம் தரப்பட்டது. அதை ஏற்ற அரசு, இன்று ஒரு நாள் மட்டும், படத்திற்கு ஐந்து காட்சிகள் நடத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. சிறப்பு காட்சி காலை 9:00 மணிக்கு துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை