உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் மரம் வெட்டிச் சாய்த்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்

கோவையில் மரம் வெட்டிச் சாய்த்தவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: கோவையில் அரச மரத்தின் கிளையை வெட்டுவதற்கு அனுமதி வாங்கி விட்டு, மரத்தை முழுமையாக வெட்டிச் சாய்க்கப்பட்டது. அதனால், மரம் வெட்டியவருக்கு, ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.கோவை தெற்கு வட்டம், சவுரிபாளையம் கிராமம், சண்முகம் வீதியை சேர்ந்த கனகராஜ் என்பவர், தனியார் மருத்துவமனை முன், ரோட்டோரத்தில், 2 அடி சுற்றளவு, 10 அடி உயரத்தில், 12 வயதுடைய அரச மரம் இருப்பதாகவும், அதன் கிளை காய்ந்து மருத்துவமனை மீது சாய்ந்து விழும் அபாயம் உள்ளதால், நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் ஆபத்தாக உள்ளது. மரக்கிளையை வெட்டுவதற்கு அனுமதி கோரி, தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.சவுரிபாளையம் வி.ஏ.ஓ., மற்றும் ஆர்.ஐ., ஆகியோர் நேரில் ஆய்வு செய்து, ஆபத்தாக உள்ள கிளையை மட்டும் வெட்டி அகற்ற அனுமதி வழங்கலாம் என அறிக்கை சமர்ப்பித்தனர்.உரிய வழிமுறைகளை பின்றி, திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை சம்பந்தப்பட்ட ஆர்.ஐ., மற்றும் வி.ஏ.ஓ., முன்னிலையில் வெட்டி அகற்ற, அனுமதி அளித்து, மாநகராட்சி கிழக்கு மண்டல உதவி கமிஷனருக்கு, தெற்கு தாசில்தார் முகமது சைபு உத்தரவிட்டார்.மரக்கிளையை வெட்டும் முன்பும், வெட்டிய பின்பும் புகைப்படங்கள் எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க கோவை டவுன் நில வருவாய் ஆய்வாளருக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், இரவு நேரத்தில், அரசு அதிகாரிகள் இல்லாமல், மரம் வெட்டப்பட்டது. அப்பகுதியை சேர்ந்தவர்கள் தடுத்து நிறுத்தி, வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.வி.ஏ.ஓ., மற்றும் ஆர்.ஐ., ஆகியோர் ஆய்வு செய்து, தாசில்தாருக்கு அறிக்கை சமர்ப்பித்தனர். அரசின் உத்தரவை மீறி, அனுமதிக்கு மாறாக மரத்தை வெட்டிச் சாய்த்த குற்றத்துக்காக, கனகராஜ் என்பவருக்கு, விதிமுறைப்படி, ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து, தாசில்தார் முகமது சைபு உத்தரவிட்டார். கனகராஜ், அத்தொகையை செலுத்தினார்.இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பசுமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Ramaraj P
ஜூலை 01, 2025 21:12

ஆபரேஷன் சக்ஸஸ்


Gauri Shankar
ஜூலை 01, 2025 15:46

Same kind of an incident was reported in Bommanampalayam sometime back... A local man was hired to trim the branches which were protruding into a building and upon instructions from the person who got it done, entire tree branches were cut...


Narayanan
ஜூலை 01, 2025 14:40

சாலை விரிவாக்கம் என்ற பெயரில் அரசு மிகவும் பழமையான மரங்களை வெட்டி சாய்க்கிறது? அரசு சரியில்லை


Ramesh Sargam
ஜூலை 01, 2025 13:04

இதேபோன்று தமிழகத்தில் காடுகளை அழிப்பவர்களுக்கும், ஏறி, குளம், ஆறுகள் இவற்றை ஆட்டைபோடுபவர்களுக்கும், அனுமதியில்லாமல் மலையை குடைந்து குவாரி தொழில் புரிபவர்களுக்கும் அபராதம் விதித்தால் தமிழகம் வேறு யாரிடமும் கை ஏந்த வேண்டிய அவலநிலை இருக்காது.


ஆரூர் ரங்
ஜூலை 01, 2025 12:00

ராமதாசு கருத்துக் கூற மாட்டார்.


Ramkumar Ramanathan
ஜூலை 01, 2025 11:48

there is no manu meethi cholan in our country to give justice to the poor cow, only selfish officials doing duty just for the sake of money. the one who gave permission to cut the branches should be suspended first


Rock
ஜூலை 01, 2025 16:18

why should they be suspended for giving permission to cut the branch?


சின்ன சேலம் சிங்காரம்
ஜூலை 01, 2025 11:43

இது போதுமான தண்டனை அல்ல. குறைந்தது ஆறு மாதம் சிறையில் தள்ள வேண்டும்


Manaimaran
ஜூலை 01, 2025 11:40

கை கால வெட்டி. இருக்கனும். ஆஸ்பத்திரி பணம் குடுத்திருக்கும் கட்டியிருப்பாண்


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஜூலை 01, 2025 11:05

சிறப்பு. இதேபோல் மண்ணையும், மலைகளையும் மற்றும் ஏனைய வளங்களை திருடி விற்பவர்களை தூக்கில் போடவேண்டும்


Rock
ஜூலை 01, 2025 16:19

ஏன் தூக்கில் போட வேண்டும் ?


Rock
ஜூலை 01, 2025 16:20

அய்யா/அம்மா/சகோ, நாம் அனைவரும் தவறு/தீமை/பாவம் செய்தவர்கள் தான் நீங்கள்/ நான் இதுவரை தவறு செய்த்ததிதில்லையா? எனக்கு/ உங்களுக்கு யார் தண்டனை கொடுப்பார்கள்? சகோ இது கலிகாலத்தின் இறுதி காலம் உங்கள் உள்ளத்தை திருப்பிக்கொள்ளுங்கள் சொர்க்கத்தின் அரசாட்சி பூமியில் விரைவில் வருகின்றது. ஒவ்வொருவரும் நீதியின் அடிப்படையில் தீர்ப்பிற்கு உட்படுவார்கள். பாவமற்ற இயேசு கிறிஸ்து, நம்மிடம் அன்பு கொண்டு, நம் தவறுகளுக்கான தண்டனையை தானே சுமந்தார். அதனால், நமக்காக இருந்த தண்டனை நம்மை விலக்கி விட்டது. இதைவிட உயர்ந்த பரிகாரம் உங்களிடம் இருந்தால் தயவுசெய்து கூறுங்கள் எனவே, இவ்வுலக வாழ்க்கையும் அமைதியுடன் செல்கிறது இறைவனுடனான நிரந்தர வாழ்வும் நமக்கே அவர் கருணைமிகு நல்இருப்பவர் இறைவன் நல்லவர்


SANKAR
ஜூலை 01, 2025 09:59

I am very happy and related!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை