உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு ஆவணப்பதிவுக்கு ஒரு லட்சம் ரூபாயா; போலீசை வாய் பிளக்க வைத்த லஞ்ச வேட்டை!

ஒரு ஆவணப்பதிவுக்கு ஒரு லட்சம் ரூபாயா; போலீசை வாய் பிளக்க வைத்த லஞ்ச வேட்டை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிருஷ்ணகிரி: தேன்கனிக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் வேட்டையில், கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பொறுப்பு சார் பதிவாளர், ஆவண எழுத்தர், ஆவண பதிவுக்கு வந்த நபர் ஆகிய மூவர் மீது வழக்கு பதியப்பட்டது.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர் திடீர் சோதனை நடத்தினர். போலீசார் சென்றபோது, பொறுப்பு சார் பதிவாளர் சீனிவாசன் இருக்கையில் இருந்தார். அங்கிருந்த தனி நபர்கள் 16 பேரையும் தனித்தனியாக அழைத்து போலீசார் விசாரித்தனர். அவர்களில் ஒருவரான கருணாகரன் என்பவர், ஒரு லட்சம் ரூபாய் வைத்திருந்தார். பத்திரப்பதிவு முடிந்த பிறகு, நிலம் விற்பனை செய்பவருக்கு கொடுப்பதற்கு வைத்திருப்பதாக கூறினார். அவரது ஆவணத்தில், ஏற்கனவே முழுத்தொகையும் நிலம் விற்பனை செய்பவருக்கு வழங்கப்பட்டதாக இருந்தது. இதனால் அவர் கூறிய விளக்கம், போலீசாருக்கு ஏற்புடையதாக இல்லை. சார் பதிவாளருக்கு லஞ்சம் தருவதற்காக கொண்டு வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், போலீசார் அவரிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.சார் பதிவாளர் அலுவலகத்தில், பொதுமக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட அறையினுள் போலீசார் சோதனை நடத்தினர். அங்கிருந்த மர அலமாரியில் ஏராளமான கோப்புகள் வைக்கப்பட்டிருந்தன.அவற்றில், கோப்புகளுக்கு அடியில் கற்றையாக வெள்ளை தாளில் சுற்றி வைக்கப்பட்ட பணம் மொத்தம், 46,500 ரூபாய் இருந்தது. அந்த பணத்தை பற்றி பொறுப்பு சார் பதிவாளரிடம் கேட்டபோது, 'தனக்கு எதுவும் தெரியாது' என்றார்.பொதுமக்கள் வர அனுமதியற்ற, அலுவலர்கள் மட்டுமே சென்று வரும் அந்த அறையில் இருந்த பணம் பற்றி, அங்கிருந்த அனைவரும், 'தங்களுக்கு தெரியாது' என்று சாதித்தனர்.இதையடுத்து, அந்தப்பணம், லஞ்சப்பணம் என்று கருதி கைப்பற்றப்பட்டது.அருகேயிருந்த ஆவண எழுத்தர் சுஜாதா அலுவலகத்தில் சோதனை நடத்திய போலீசார், உரிய முகாந்திரம் இல்லாத 53,500 ரூபாயை கைப்பற்றினர்.பொது ஊழியரான பொறுப்பு சார் பதிவாளர் சீனிவாசன், ஆவண எழுத்தர்களிடம் இருந்தும், இடைத்தரகர்களிடம் இருந்தும், லஞ்சம் பெற்றுக் கொண்டதற்கு முகாந்திரம் இருப்பதால், அவர் மீது வழக்கு பதியப்பட்டது. அதேபோல், தனி நபரான கருணாகரன், ஆவண எழுத்தர் சுஜாதா ஆகியோர், சார் பதிவாளருக்கு லஞ்சம் கொடுக்கும் நோக்கத்துடன் பணம் வைத்திருந்து பிடிபட்டனர். இதற்கு உரிய முகாந்திரம் இருப்பதாக கருதிய போலீசார், அவர்கள் மீதும் வழக்கு பதிந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Mayakannan Kannan
அக் 29, 2024 21:49

உடம்பில் வெடிகுண்டு கட்டி ரிமோட் மூலம் வெடித்து டிவியில் வெளியிடுங்கள்


கத்தரிக்காய் வியாபாரி
அக் 27, 2024 22:20

அந்த பணத்தை ரூபாய் 200 ஆக பிரித்து ஒரு 100 தீயமுக அல்லக்கைகளுக்கு குடுத்தால் ஒரு பத்துநாள் போராட்டம் நடத்துவார்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் எதிர்த்து.


rama adhavan
அக் 27, 2024 21:44

மற்ற துறை அலுவலர்களும் இத் துறைக்கு அயல் பணியில்... தலைமை செயலகம், வருவாய் துறை பணியாளர்கள் அயல் பணிக்கு செல்வது போல் அனுப்பி அவர்களும் இங்கு வர வேண்டும். அப்போது தான் ஊழல் குறையும். போக்குவரத்து துறையிலும் இப்படி செய்யலாம்.


kuruvi
அக் 27, 2024 21:32

தற்போது பத்திரப்பதிவு முறையில் மாற்றம் வேண்டும். பதிவு அலுவலகத்திற்கு மக்கள் செல்வதை மாற்றவேண்டும். பத்திரப்பதிவு எல்லாமே மக்கள் நேரில் செல்லாமல் பதியும் முறை கொண்டுவரவேண்டும்.இது அமெரிக்காவில் நடைமுறையில் உள்ளது. பதிவுதுறையும்,வாகன பதிவுதுறையும் தான் மிக அதிகமான ஊழல் நிறைந்த துறைகள்.இந்த இரண்டு துறையும் சரி செய்தால் லஞ்சம் குறையும்.


Lion Drsekar
அக் 27, 2024 20:34

எப்படி இருந்தாலும் தவறு செய்பவர்கள் திருந்தவே மாட்டார்கள் . அதே போன்று தவறு செய்தவர்களை பதவி நீக்கமும் செய்யப்போவது இல்லை, அவர்களை வேறு இடத்துக்கு மாற்றல் மட்டுமே செய்வார்கள். எவ்வளவு பணம் தவறான முறையில் கொள்ளை அடித்து சம்பாதித்தாலும் , அபராதம் செலுத்தி விட்டால் , எல்லா சொத்தும் பணமும் நேர்மையாக சம்பாதித்ததாக கருதப்படுவதால், இந்த தொழில் சீரும் சிறப்புமாக நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கும், வந்தே மாதரம்


Ramesh Sargam
அக் 27, 2024 20:15

நான் கேட்கிறேன் இனி அங்கு லஞ்சமே வாங்கமாட்டாங்களா? லஞ்சம் கொடுக்காமல் மக்கள் சேவை தொடருமா? ஏன் சாமி இந்த கண்துடைப்பு வேட்டை? நீங்கள் வேண்டுமென்றால் பாருங்கள், எங்களையே ரைடு செய்கிறாயா, என்று கோபத்துடன் லஞ்ச பணத்தை அதிகம் வாங்குவார்கள். உங்கள் வேட்டையால் பாதிக்கப்படப்போவது மக்கள்.


D.Ambujavalli
அக் 27, 2024 18:59

என்ன சார் தெரியாத மாதிரி கேட்கறீங்க ? வேலைநேரம் முடிந்த பின் தான் இவர்கள் ‘ வேலையே ‘ ஆரம்பிக்கும்.மொத்த ‘collection ‘ ம் மேலதிகாரிக்கு செல்லும். அவர் தரத்திற்கேற்ப பிரித்துக்கொடுத்துவிட்டு, லோக்கல் எம். எல். ஏ. , அங்கிருந்து அமைச்சர் வரை போகப் பிரித்து விட்டே அலுவலகம் மூடும் இந்த லஞ்ச ஒழிப்பு எல்லாம் கண்துடைப்பு ரெயிடுகள்


Sekar Times
அக் 27, 2024 17:37

லஞ்சம் வாங்கியவர்களை மட்டும் அல்ல லஞ்சம் கொடுத்தவர்களையும் கண்டு பிடித்து கைது செய்வதை சட்டம் கட்டாயப் படுத்தவேண்டும்.அப்போதுதான் லஞ்சம் கொஞ்சமாவது கட்டுப்படும்.


Sathyanarayanan Sathyasekaren
அக் 27, 2024 22:10

சேகர், நேர்மையாக சம்பாதித்து சொத்து வாங்கும் நான் உட்பட யாரும் விரும்பி லஞ்சம் கொடுப்பதில்லை, கொடுக்காவிட்டால் அனுபவிக்க நேரும் துயரங்கள், அலைச்சல்கள் உங்களுக்கு தெரியாதா? நான் பட்டா மாறுதலுக்காக விண்ணப்பம் போது அதுவும் சிறப்பு முகாமில் நேரடியாக தாசில்தாரிடம் கொடுத்த போதுகூட, மூன்று மாதங்களாக அலைக்கழித்தார்கள். லஞ்சம் வாங்கிக்கொண்ட பின்தான் கொடுத்தார்கள்.


sri
அக் 27, 2024 16:11

கைதானவர்கள் அன்று மாலையில் சொந்தப் பொறுப்பில் ஜாமீனில் விடுதலை செய்யப்படுவர். மீண்டும் அரசு பணியாற்ற வருவர். விட்ட பணத்தை திரும்ப பிடிப்பர்


narayanansagmailcom
அக் 27, 2024 16:10

திமுகவில் எங்கும் ஊழல் எல்லாவற்றிலும் ஊழல். இனி தேவை இல்லை இந்த விடியா அரசு. எல்லா அரசு அலுவலர்களையும் அதிகாரிகளையும் மந்திரிகளையம் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். அவர்கள் மொத்த சொத்துகளையும் பறிக்க வேண்டும்