உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமும் ஒரு பெருமாள்- 04

தினமும் ஒரு பெருமாள்- 04

குறை தீர...@

@திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் வட்டம் கூழமந்தலில் கோயில் கொண்டிருக்கும் பேசும் பெருமாளை தரிசித்தால் குறையனைத்தும் தீரும். பல ஆண்டுக்கு முன்பு 12 அடி உயர மகாவிஷ்ணுவின் சிலை பூமியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டு கூழமந்தலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவர் நின்ற கோலத்தில் கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியபடி ஸ்ரீதேவி, பூதேவியுடன் இருக்கிறார். பக்தரை நோக்கி கருணையுடன் பேசுவது போல இருப்பதால் 'பேசும் பெருமாள்' எனப் பெயர் பெற்றார். தாயார்கள் இருவரின் வலது கைகளிலும் தாமரை மலர் இருப்பது சிறப்பு. ஆந்திர மாநிலம் நெல்லுார் பகுதியை ஆட்சி செய்த விஜயகண்ட கோபாலன் இங்கு விளக்கு எரிய தானம் அளித்துள்ளார். தமிழ்ப்புத்தாண்டு, வைகாசி விசாகம் கருடசேவை, புரட்டாசி சனி, வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரம் சிறப்பான விழாக்கள். சனிக்கிழமை தோறும் திருமஞ்சனம் விசேஷமாக நடக்கிறது.காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் வழியில் 18 கி.மீ., நேரம்: காலை 8:00 - 12:00 மணி மாலை 4:00 - 8:00 மணிதொடர்புக்கு: 76399 41369அருகிலுள்ள தலம்: காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் நேரம்: காலை 6:00 - 12:30 மணி மதியம் 3:30 - 8:30 மணிதொடர்புக்கு: 044 - 2726 9773


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை