உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தினமும் ஒரு பெருமாள் -06 : திருமணம் நடக்க...

தினமும் ஒரு பெருமாள் -06 : திருமணம் நடக்க...

தினமும் ஒரு பெருமாள் -06திருமணம் நடக்க... புதுச்சேரி அருகே தென்னம்பாக்கத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரரை வழிபட்டால் திருமணம் நடக்கும்.திருமூலர், அகஸ்தியர், பிருகு, வசிஷ்டர் ஆகியோரின் நாடி ஜோதிட ஓலை சுவடிகளில் உள்ளது போல இக்கோயில் கட்டப்பட்டது. இங்கு ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாள் காட்சி தருகிறார். ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்தன்றும் இங்கு யாகம் நடக்கிறது. இதில் கலந்து கொண்டு பெருமாளுக்கு அபிேஷகம் செய்தால் திருமணத்தடை விலகும்.மேலும் இங்குள்ள சக்கரத்தாழ்வாரை சித்திரை நட்சத்திரத்தன்றும், யோகநரசிம்மரை சுவாதி நட்சத்திரத்தன்றும் வழிபட்டால் எதிரி பயம், நோய், கடன் தீரும். நெய் விளக்கு ஏற்றினால் நினைத்த செயல் நடக்கும். ஆண்டவன் சுவாமி என்பவர் இத்தல பெருமாள் மீது பாடல் பாடியுள்ளார். புதுச்சேரியில் இருந்து 20 கி.மீ., நேரம்: காலை 6:00 - இரவு 9:00 மணி தொடர்புக்கு: 97894 42808, 89393 19214 அருகிலுள்ள தலம்: முத்தியால்பேட்டை ஹயக்ரீவர் 21 கி.மீ.,நேரம்: காலை 8:00 - 11:00 மணி மாலை 6:00 - 9:00 மணி தொடர்புக்கு: 94431 04383


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை