மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
3 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago
தேனி : வெங்காயம் விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், தொடர் ஏற்றுமதி காரணமாக விலை குறையவில்லை. கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழகத்தில் நாமக்கல், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, தேனி, ஆண்டிபட்டி, மயிலாடும்பாறை, சின்னமனூர் பகுதிகளில் வெங்காய விளைச்சல் அதிகரித்துள்ளது. தற்போது அறுவடையும் நடந்து வருகிறது. வழக்கமாக அறுவடை காலங்களில் வெங்காயம் விலை குறையும். ஆனால் தற்போது மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளுக்கு சின்ன வெங்காயம் அதிகம் ஏற்றுமதியாகிறது.ஏற்றுமதியால் தேவை அதிகரித்துள்ளது. எனவே, வெங்காயம் விலை குறையவில்லை. ஒரு கிலோ சின்ன வெங்காயம் 30 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக அறுவடை தொடங்கி உள்ளதால் விலை குறையும் என, நினைத்து கவலையில் இருந்த விவசாயிகள், ஏற்றுமதி கை கொடுத்ததால் விலை அதிகரித்து, மகிழ்ச்சியில் உள்ளனர்.
3 hour(s) ago | 3
13 hour(s) ago | 1
14 hour(s) ago