உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 1 மட்டும் மூடல்....! 20 சுரங்கப்பாதைகளில் சீரான போக்குவரத்து; தற்போதைய நிலவரம் இதுதான்!

1 மட்டும் மூடல்....! 20 சுரங்கப்பாதைகளில் சீரான போக்குவரத்து; தற்போதைய நிலவரம் இதுதான்!

சென்னை: சென்னையில் 20 சுரங்கப்பாதைகளில் வழக்கம்போல் போக்குவரத்து இயக்கப்படுகிறது. மொத்தம் உள்ள 21 சுரங்கப்பாதைகளில் கணேசபுரம் சுரங்கப்பாதை மட்டும் மூடப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் துவக்கமே, வேற லெவலில் உள்ளது. இரண்டு தினங்களாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி வருகிறது. தலைநகர் சென்னையில் இடைவிடாது மழை பெய்து வருகின்றது. நகரின் பல பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் சென்னை மாநகராட்சி அதிகாரிகள், மண்டலம் வாரியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், மொத்தம் உள்ள 21 சுரங்கப்பாதைகளில் கணேசபுரம் சுரங்கப்பாதை மட்டும் மூடப்பட்டுள்ளது என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இதனால், கணேஷ்புரம் சுரங்கப்பாதையில் நீரை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.20 சுரங்கப்பாதைகளில், தண்ணீர் தேங்கவில்லை. போக்குவரத்து சீராக உள்ளது என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அந்த சுரங்கப்பாதைகள் விவரம் வருமாறு;*கத்திவாக்கம்*மாணிக்கம் நகர்*வியாசர்பாடி*எம்.சி. ரோடு(ஸ்டான்லி மருத்துவமனை)*ரிசர்வ் வங்கி*கெங்குரெட்டி*வில்லிவாக்கம்*ஹாரிங்டன்*நுங்கம்பாக்கம்*ஜோன்ஸ் ரோடு*துரைசாமி சுரங்கப்பாதை*மேட்லி*ரங்கராஜபுரம்*பஜார் ரோடு*மவுண்ட்*தில்லை கங்கா நகர்*பழவந்தாங்கல்*அரங்கநாதன்* ஸ்டான்லி நகர்* பெரம்பூர்இந்த சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காததால் வாகன ஓட்டிகள் இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ganesan
அக் 16, 2024 15:47

யாரேனும் பொது மக்களாகிய நாம் பிளாஸ்டிக் கவரை பொது வெளியில் போடுவதை பற்றி பேசினோமா? அவ்வளவு பிரச்சனைக்கு இது தான் காரணம். குப்பையை குப்பை தொட்டியில் போடவேண்டும் என்று சிறு சாக்லேட் கவர் கூட பொது மக்களுக்கு அறிவு வருதோ அப்போது தான் சரியாக வரும். எல்லாம் அரசாங்கம் செய்ய வேண்டியது என்று சொல்லிவிட்டு


angbu ganesh
அக் 16, 2024 09:49

பேசாமல் சென்னையை மூடிடுங்க, மழை வடிகால் செலவு 4000 கோடின்னு சொன்னானுங்க ஆனா இதனை வருசமா நீக்காத இடத்தில எல்லாம் தண்ணி நிக்குது ஆனா கெணத்த காணோம்னு வடிவேல் சொன்ன மாதிரி 4000 கோடியை காணோம்னு சொல்ராங்க


Lion Drsekar
அக் 16, 2024 08:40

ஏதாவது தெரிந்து கொள்ளவேண்டும் என்றால் முக்கிய பிரமுகர்கள் நேரடியாக மக்களிடம் பேசும் வீடியோ மற்றும் மேயர் பெட்டியை திரும்ப திருப்ப போட்டுக்கொண்டே இருந்தால் நாட்டு நடப்பு அறிந்துகொள்ளலாம், வந்தே மாதரம்


Ravi Kumar Damodaran
அக் 16, 2024 08:38

இதை பாராட்டு என்று எடுத்துக்கொள்ளலாம் தானே?


Dharmavaan
அக் 16, 2024 08:05

இது உண்மையா பொய்யா. என்று மக்கள் சொல்ல வேண்டும்


அருணாசலம்
அக் 16, 2024 09:48

உண்மை எது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.


raja
அக் 16, 2024 08:00

எப்படியெல்லாம் ஸ்டிக்கர் ஒற்றானுவோ பாரு தமிழா 21 சுரங்க பாதையில் நீர் புகுந்து மூடி இருக்குன்னு யூடியூப் சேனல் மக்கள் கழுவி கழுவி ஊத்துறாங்க... வீடியோ அரசு இப்படி சொல்றாங்க..


angbu ganesh
அக் 16, 2024 09:50

இதுக்குத்தான் காது பெருசா இருக்க கூடாதுன்னு சொல்ராங்க எவ்ளோ பூவை சுத்துதுங்க


VENKATASUBRAMANIAN
அக் 16, 2024 07:45

அது என்ன தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தண்ணீர் இருந்தால் மூடத்தானே வேண்டும்.


சாண்டில்யன்
அக் 16, 2024 07:31

என்னை திருப்பி பார்க்க வைத்து விட்டது இந்த செய்தி இன்னும் கொஞ்சம் நடுநிலை மிச்சமிருக்கு இங்கே


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை