உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில்களில் பக்தி பாடல்களுக்கு மட்டுமே அனுமதி: ஐகோர்ட்

கோவில்களில் பக்தி பாடல்களுக்கு மட்டுமே அனுமதி: ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவில் வளாகத்தில் பக்திப் பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.கோவில் திருவிழாக்களின் போது இசைக்கச்சேரி நடப்பது வழக்கம். சில இடங்களில் பக்தி பாடல்களுடன் சினிமா பாடல்கள் உள்ளிட்டவை இடம்பெறும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=oomq7uja&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், புதுச்சேரி வரதராஜ பெருமாள் கோவிலில் நடந்த இசைக்கச்சேரியில் பக்தி பாடல்களை தவிர சினிமா பாடல்கள் தான் அதிகம் பாடப்பட்டதாகக்கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சினிமா பாடல்களை பாட தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.இதனை விசாரித்த ஐகோர்ட், ' கோவில் வளாகத்திற்குள் இசைக்கச்சேரி நடத்தும் போது பக்திப் பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும். சினிமா பாடல்கள் பாட அனுமதி கிடையாது.' என உத்தரவிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

N Sasikumar Yadhav
மார் 06, 2025 10:00

அப்ப மசூதியிலும் சர்ச்சிலும் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென பிரசாரம் செய்கிறார்களே அதைப்பற்றி கணம் கோர்ட்டார்களுடைய கருத்து என்னவோ


தாமரை மலர்கிறது
மார் 05, 2025 20:37

சரியான தீர்ப்பு. தீர்ப்பில் கொஞ்சம் நெளிவு சுளிவாக இருந்திருந்தால், திருட்டு திராவிடம் கோவில்களில் நேத்து ராத்திரி எம்மா பாடலை ஒளிபரப்ப காத்திருக்கிறது.


Ganapathy
மார் 05, 2025 20:10

இதற்கெல்லாம் இன்றைய நிலையில் கோர்ட் உத்தரவு தேவைப்படுவது மிகப்பெரிய கேவலம்.


GMM
மார் 05, 2025 19:34

முன்பு பக்தி பாடலுக்கு முன் நாதஸ்வரம் இசைப்பது உண்டு. ஏராளமான பக்தி பாடல்கள் உண்டு. ஒழுக்கம், பக்தி உருவாக்கும் சிறந்த தெளிவான உத்தரவு. ஆன்மிக சொற்பொழிவு இருக்கும். சினிமா பாடல் முன்பு இருக்காது. தற்போது பல பாடல் மிக ஆபாசமானது. ? பொது வெளியில் கூட கேட்க முடியாது. ?


Oru Indiyan
மார் 05, 2025 18:27

அரசரே.. எந்த மத பக்தி பாடல்கள் என்று சொல்ல மறந்து விட்டிர்களே


VSMani
மார் 05, 2025 17:58

கோவில் வளாகத்திற்குள் இசைக்கச்சேரி நடத்தும் போது பக்திப் பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என்றால் யார் விடிய விடிய .பக்திப் பாடல்களைக் கேட்பார்கள்? கோவில் கொடை என்றால் ஆரம்பத்தில் முதல் 3 பாடல்கள் பக்திப் பாடல்கள் அதன் பின் சினிமா பாடல்கள் குத்து பாடல்கள் டப்பாங்குத்து டான்ஸ் கள் இதுதானே வழக்கம்.


சின்ன சுடலை ஈர வெங்காயம்
மார் 05, 2025 18:33

அப்போ ஆடலும் பாடலும் நிகழ்ச்சி வேணும்னா தீயமுக மாநாடு தான் சரி.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை