உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவில் நிதியில் துவங்கிய கல்லுாரியில் ஹிந்துக்களுக்கு மட்டுமே பணி: ஐகோர்ட்

கோவில் நிதியில் துவங்கிய கல்லுாரியில் ஹிந்துக்களுக்கு மட்டுமே பணி: ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கோவில் நிதியில் துவங்கப்பட்ட கல்லுாரியில், ஹிந்துக்கள் மட்டுமே பணி நியமனம் பெற தகுதி உள்ளது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தில், சுஹாயில் என்பவர் தாக்கல் செய்த மனு:

சென்னை கொளத்துாரில் உள்ள கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், உதவியாளர், இளநிலை உதவியாளர், டைப்பிஸ்ட், அலுவலக உதவியாளர், வாட்ச்மேன், துப்புரவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று, 2021 அக்டோபரில், அறநிலையத்துறை இணை ஆணையர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நேர்முகத் தேர்வுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2un74kz7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

நிபந்தனை

பணியிடங்களுக்கு ஹிந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நான் பிறப்பால் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவன்.அறநிலையத்துறை விதித்துள்ள நிபந்தனையால், நேர்முகத் தேர்வில் பங்கேற்க எனக்கு தகுதிஇல்லை. எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அலுவலக உதவியாளர் பணிக்கு போட்டியிட, என்னை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, ''ஹிந்துக்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. ''கோவில் வாயிலாக இயங்கும் கல்லுாரி, மத நிறுவனம் அல்ல; அது கல்வி நிறுவனம். கல்லுாரியில் மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு, அறநிலையத்துறை நடைமுறை பொருந்தாது.கல்வி நிறுவனத்தை நிர்வகிப்பது, மதச்சார்பற்ற நடவடிக்கை. எனவே, மத அடிப்படையில் நியமிக்க முடியாது,'' என்றார்.அறநிலையத்துறை சார்பில் கூடுதல் அரசு பிளீடர் எஸ்.ரவிச்சந்திரன், இணை ஆணையர் சார்பில், வழக்கறிஞர் எஸ்.சூரியா ஆஜராகி, 'கோவில் வாயிலாக துவங்கிய கல்லுாரியில், ஹிந்துக்கள் மட்டுமே நியமிக்கப்பட தகுதி உள்ளது.'அறநிலையத்துறை சட்டப்படி, மத நிறுவனம் என்பதால், அதன் ஊழியர்களாக ஹிந்துக்கள் மட்டுமே இருக்க முடியும். 'கோவில் நிதி வாயிலாக கல்லுாரி துவக்கப்பட்டுள்ளது. அரசின் நிதியுதவி இன்றி கல்லுாரி இயங்குகிறது' என்றனர்.இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி விவேக்குமார் சிங் பிறப்பித்த உத்தரவு: ஆவணங்களை பரிசீலிக்கும் போது, கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியானது, ஒரு சுயநிதி கல்லுாரி என்பதும், அரசிடம் இருந்து எந்த உதவியும் பெறாமல், மாணவர்களிடம் பெறப்படும் கட்டணம் வாயிலாக செலவுகள் மேற்கொள்ளப்பட்டு, கோவிலால் நடத்தப்படுவது என்பதும் தெரிகிறது.

தள்ளுபடி

இந்தக் கல்லுாரியை துவக்கியது கோவில் என்பதாலும், மத நிறுவனம் என்ற வரையறைக்குள் வருவதாலும், அறநிலையத்துறை சட்டம் இதற்கு பொருந்தும். எனவே, ஹிந்துக்கள் மட்டுமே பணி நியமனம் பெற தகுதி உள்ளது.அறநிலையத்துறை சட்டப்படி, இந்தக் கல்லுாரியில் எந்த நியமனம் நடந்தாலும், அவர் ஹிந்து மதத்தை பின்பற்றுபவராக இருக்க வேண்டும். இந்த வழக்கில் தகுதியில்லை; மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 54 )

kalyan
நவ 26, 2024 22:20

தந்தை தாய் இருவரும் கிறிஸ்தவராக அல்லது இஸ்லாமியர்களாக இருந்தாலும் "எனக்கு இந்து மதத்தில் , இந்து முறை வழிபாட்டில் நம்பிக்கை இருக்கிறது" என்று ஒரு உறுதி பிரமாணம் Affidavit நீதிமன்றத்தில் ஒருவர் தாக்கல் செய்தால் திரு யேசுதாஸ் அவர்கள் அத்தகைய ஒரு பிரமாணம் செய்துள்ளார் அதனால் தான் அவர் மூகாம்பிகை போன்ற திருத்தலங்களில் அனுமதிக்கப்படுகிறார் . குருவாயூர் தேவஸ்தானம் அவருக்கு அனுமதி மறுக்கவில்லை . அவராக மக்கள் மனம் புண்படாமல் இருக்க கோவில் கொடிமரத்தோடு ஒதுங்கி நிற்கிறார் அவ்வளவே அவர்களுக்கு இந்துக்களைப்போன்ற உரிமைகள் பெறலாம் . நமது இஸ்லாமிய நண்பர் அதைச்செய்து இருந்தால் ஒருவேளை தீர்ப்பு வேறுவிதமாக இருந்திருக்கும் .


V. Nagasubramanian
நவ 26, 2024 17:18

யார் வேண்டுமானாலும் படிக்கலாம் அது தடை இல்லை , வேலை பார்ப்பது மட்டும் தான் ஹிந்துக்கள் , நீங்கள் படித்தீ ர்களே அந்த கல்லூரியில் வேலை பார்த்தவர்கள் கிறிஸ்துவர்கள் தானே, அண்மையில் ஒரு விளம்பரம் பார்த்தேன் உருது முன்னேற்ற சங்கம் கணிப்பொறி யில் டிப்ளமோ போன்ற கோர்ஸ் நடத்துகிறது அதில் படிக்க சேருவதற்கான விளம்பரம். ஆனால் அதில் சேருவதற்கு உருது கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டுமாம் இது எப்படி இருக்கு


TSelva
நவ 26, 2024 14:07

இந்த துரைச்சாமி போன்ற வக்கீல்களை ஏன் இந்து சமுதாயத்தில் இருந்து ஒதுக்கி வைக்ககூடாது? இவர் நியாயத்தின் எதிராளி. இவரை பெற்றவர்களும் இவரது குடும்பத்தாரும் இவரை நினைத்து வெட்கப்பட வேண்டும்.


Mathi Sekar
நவ 26, 2024 12:55

நேற்று சென்னை உயர்நீதிமன்றம் மிக சிறந்த வரலாற்று தீர்ப்பை கொடுத்துள்ளது, இதனால் என்ன தெரிகின்றது என்றால் அடிப்படையில் இந்து காவல் சட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன ஆனால் ஏதோ ஒரு சக்தி பல குழப்பங்கள் குழப்பவாதிகள் மூலம் அதை மறைத்து வந்திருக்கின்றது, இப்போது அவையெல்லாம் மெல்ல மெல்ல துலங்குகின்றது என்பது


Sivagiri
நவ 26, 2024 12:51

சிறுபான்மையினர் பள்ளி கல்லூரி என்று பதிவு செய்து, அரசின் காசிலேயே, இடம், கட்டிடம், ஆசிரியர்கள் சம்பளம், மற்றும் அனைத்து செலவுகளையும் அரசின் தலையில் கட்டி விட்டு, மத பிரச்சாரம் பட்டுமே செய்யும் கல்வி நிறுவனங்களுக்கு அரசின் நிதியை நிறுத்த வேண்டும் . . . .


திராவிட மாடல் மனித நேய மாடல்
நவ 26, 2024 12:35

ஆங்கிலேயனுக்கு ஐடியா கொடு நாட்டில் கலவரம் செய்ய காரணமான இயக்கம் தான் RSS DMK இயக்கம் இல்லை என்றால் நாம் பானிபூரி தான் விற்று கொண்டு இருந்திருப்போம் , பாமரனையும் பட்டதாரியாகி அழகு பார்த்தவர் தான் கலைஞர்


ஆரூர் ரங்
நவ 26, 2024 14:29

திமுக செய்யாத கலவரமா? சென்னை பிஜெபி அலுவலகத்தின் மீது கடும் வன்முறைத் தாக்குதல் நடத்தி இன்றுவரை வழக்கே போடாமல் இருப்பது திமுக. அட சொந்த கட்சியின் பத்திரிக்கை அலுவலகத்தையே கொளுத்தி அப்பாவி ஊழியர்களின் உயிரைப் பறித்தது ?


madhan kumar
நவ 28, 2024 14:53

₹200??


திராவிட மாடல் மனித நேய மாடல்
நவ 26, 2024 12:35

இது தவறான உதாரணம் ஏன் எனில் TN இல் 80 % கல்வி கற்றது கிறிஸ்துவ பள்ளிகளில் தான் எந்த ஹிந்துவும் பள்ளியோ கல்லூரியோ திறந்து சொற்ப பணத்தில் கல்வி கொடுக்கவில்லை ஏன் நான் கூட செயின்ட் ஜொஸ்ப் பள்ளியில் தான் படித்தேன் , ஆகவே இது தவறாகவே தெரிகிறது


hari
நவ 26, 2024 16:46

நீ படிததே வேஸ்டு


thanjai NRS krish
நவ 26, 2024 18:43

இப்பொழுது கிருஸ்தவ சிறுபான்மை என்ற பெயர்களில் அரசு முழு உதவியோடு மதச்சார்பின்மையற்ற பள்ளிகளை நடத்தும் CSI,RC,TELC போன்ற அமைப்புகளுக்கு இந்த கல்வி நிறுவனங்கள் எப்படிக் கிடைத்தது என்பதை மறந்து விடாதீர்கள் இவை அனைத்தும் வெள்ளை காரனால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிக்க பட்டவை தான்.அவர்கள் ஓன்றும் விலை கொடுத்து வாங்கியவை அல்ல என்பதை மறந்து விட வேண்டாம்.வெள்ளைக்காரன் இந்த நாட்டை விட்டு போன பொழுது அரசுடமையாக்க பட்டு இருக்க வேண்டும்.ஆனால் இவர்கள் ஆக்கிரமிக்கப்படப்பட்டு விட்டது என்பது தான் உண்மை.


Dharmavaan
நவ 26, 2024 12:06

கோயில்களை இடித்த நாத்திக ஹிந்து எதிரி திருட்டு த்ரவிட கூட்டத்தின் கொத்தடிமை தூக்கிப்பிடிக்கிறது


ஆரூர் ரங்
நவ 26, 2024 11:37

சிலை வழிபாட்டை பைபிள் (பார்க்க கொரிந்தியன் 10) கடுமையாக எதிர்க்கிறது. விக்கிரகங்களுக்கு வைக்கப்பட்ட படையலைக் கூட சாப்பிடக்கூடாது என்கிறார்கள் ஆக விக்கிரகத்துக்கு அளிக்கப்பட்ட ஹிந்து ஆத்திகர்களின் நிதியை விக்கிரக வழிபாட்டை எதிர்ப்பவர்களுக்கு செலவழிக்க முடியாது. அது அவர்களுக்கே பாவச் செயல்.


ஆரூர் ரங்
நவ 26, 2024 11:31

சிலை வழிபாட்டை இஸ்லாம் பாவச்செயல் ஹராம் எனத் தடுத்துள்ளதே. அப்போ விக்ரஹத்தை வணங்கி செலுத்தும் காணிக்கையை முஸ்லிமுக்கு செலவழிப்பது மனுதாரருக்கே ஏற்புடையதல்ல. அடுத்து ஆலய வருமானத்தில் ஜிஹாதிகளுக்கும் பங்கு கேட்பார்கள் போலிருக்கிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை