மேலும் செய்திகள்
எஸ்.ஐ.ஆர்., பணியில் ஈடுபட்ட பெண் ஊழியர் தற்கொலை
1 hour(s) ago
143 கி.மீ., வேகத்தில் ரயில் இயக்கி சோதனை
1 hour(s) ago
இந்தாண்டில் இதுவரை 5,946 கண்கள் தானம்
1 hour(s) ago
சென்னை: 'பத்தாம் வகுப்புக்கான இரண்டாம்கட்ட பொதுத்தேர்வில், மூன்று பாடங்கள் மட்டுமே எழுதலாம்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. 'புதிய கல்விக் கொள்கையின்படி இனி, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, இரண்டு முறை பொதுத்தேர்வு நடத்தப்படும்' என, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனால், முழு விபரம் வெளியிடப்படவில்லை. நேற்று, சி.பி.எஸ்.இ., இணை ப்பு பள்ளி முதல்வர்களுடன், சி.பி.எஸ்.இ., நிர்வாகம் 'ஆன்லைன்' வழியே ஆலோசனை நடத்தியது. அப்போது, புதிய கல்விக் கொள்கையின்படி மாற்றி அமைக்கப்பட்டுள்ள செயல் திட்டங்கள் தொடர்பான சந்தேகங்களை, பள்ளி முதல்வர்கள் கேட்டு தெளிவு பெற்றனர். பத்தாம் வகுப்பு இரட்டை பொதுத்தேர்வு குறித்த கேள்விக்கு, சி.பி.எஸ்.இ., தலைவர் ராகுல் சிங் அளித்த பதில்: தற் போது 10ம் வகுப்பு படிக்கும் மாணவ - மாணவியர், 2026ல் பொதுத்தேர்வு எழுதுவர். அவர்களுக்கு, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முதல் தேர்வு, மே மாதத்தில் இரண்டாவது தேர்வு நடக்கும். முதல் தேர்வை அனைவரும் கட்டாயம் எழுத வேண்டும் . இரண்டாம் தேர்வை விருப்பப்படுவோர் மட்டும் எழுதலாம். முதல் தேர்வு, எப்போதும் போல் அ னைத்து பாடங்களுக்கும் நடக்கும். இரண்டாவது தேர்வு, தங்களின் மதிப்பெண்களை அதிகரிக்க விரும்புவோருக்கான தேர்வாக நடத்தப்படும். அதாவது, தொழில்முறை படிப்புகளில் சேர விரும்புவோருக்கு, அதிக மதிப்பெண்கள் தேவைப்படும் என்பதால், இத்தேர்வு நடத்தப்படுகிறது. இரண்டாம் முறை தேர்வு எழுதுவோருக்கு, அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்கள் முதன்மையாகவும், மொழிப்பாடங்கள் விருப்ப தேர்வாகவும் அமையும். இத்தேர்வில் ஒருவர் மூன்று பாடங்களுக்கு மட்டுமே தேர்வு எழுத முடியும். இத்தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
1 hour(s) ago
1 hour(s) ago
1 hour(s) ago