மேலும் செய்திகள்
தவெக நிர்வாகிகளின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
46 minutes ago | 2
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
3 hour(s) ago | 27
ஊட்டி: ஊட்டியில் குறைந்த பட்ச வெப்பநிலை, 0.8 டிகிரி செல்சியசை நெருங்கியதால் கடும் குளிர் வாட்டுகிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டியில் நவ., மாதம் துவங்கும் உறைபனி, ஜன., மாதம் இறுதி வரை நிலவும். கடந்த ஆண்டு சீதோஷ்ண நிலை மாறுபாடு காரணமாக, பனி காலம் தாமதமானது. கடந்த டிச., 24ம் தேதி தென்பட்ட உறை பனிக்கு, குறைந்த பட்ச வெப்பநிலை, 4 டிகிரி செல்சியசாக பதிவானது. பின், கடும் மேகமூட்டம், மழையால் உறை பனி தென்படவில்லை. அவ்வப்போது நீர் பனி மட்டும் தென்பட்டது. கடந்த இரு வாரமாக உறை பனி பொழிவு அதிகரித்து, குறைந்த பட்ச வெப்பநிலை, 2 டிகிரி செல்சியசக பதிவானது. இந்நிலையில் இன்று ஊட்டியில் அதிகபட்ச வெப்பநிலை, 23 டிகிரி செல்சியஸ்; குறைந்தபட்ச வெப்பநிலை, 0.8 டிகிரி செல்சியசாக பதிவானது. தலைகுந்தா, காந்தள், அவலாஞ்சி, வேலிவியூ போன்ற பகுதிகளில், குறைந்த பட்ச வெப்பநிலை 'மைனஸ்' டிகிரியை தொட வாய்ப்புள்ளது. இதனால், இரவு; அதிகாலையில் கடும் குளிர் நிலவுகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படடுள்ளது. தோட்டக்கலை உதவி இயக்குனர் பால சங்கர் கூறுகையில், ''கடந்த இரு வாரமாக குறைந்த பட்ச வெப்பநிலை, 2 டிகிரி செல்சியசாக தொடர்ந்த நிலையில், இன்று, 0.8 டிகிரி செல்சியல் வெப்பநிலை பதிவானது. புறநகர் பகுதியில் இதை விட வெப்பநிலை குறைந்திருக்க வாய்ப்புள்ளது,'' என்றார்.
46 minutes ago | 2
3 hour(s) ago | 27