உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காஷ்மீரில் ஆப்பரேஷன் அகல் நடவடிக்கை; பயங்கரவாதி சுட்டுக்கொலை

காஷ்மீரில் ஆப்பரேஷன் அகல் நடவடிக்கை; பயங்கரவாதி சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டுள்ளான். இந்த ராணுவ நடவடிக்கைக்கு 'ஆப்பரேஷன் அகல்' என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள அகல் வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை தகவல் கிடைத்தது. அப்பகுதியில் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். விடிய விடிய தேடுதல் வேட்டை நடந்தது.அப்போது பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டான். மேலும், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினர் சந்தேகப்படுகின்றனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த ராணுவ நடவடிக்கைக்கு, 'ஆப்பரேஷன் அகல்' என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Rathna
ஆக 02, 2025 16:14

முளைப்பதற்கு முன்னரே மூர்க்கத்தை முடக்க வேண்டும். அது தான் அப்பாவி மக்களை காப்பாற்றும் வழி


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஆக 02, 2025 13:49

இறந்தவன் கஷ்மீரியா, பாகிஸ்தானியா என்பதை உறுதி படுத்த வேண்டும் பிறகு அவன் கஷ்மீரியாக இருந்தால் அவனது குடும்பத்தை சிறையில் அடைக்க வேண்டும் அவர்களிடமிருந்து அனைத்து ஆவணங்களையும் பறித்து நாடட்றவர்களாக அறிவித்து அரசு சலூகைகள் கிடைக்காமல் செய்யவேண்டும்.....இது காலங்காலமாக சொல்வது ஒரு தீவிரவாதி வருவான் துப்பாக்கி முனையில் அந்த குடும்பத்தை மிரட்டி தீவிரவாத வேலையில் ஈடுபட வைப்பான் தவறினால் குடும்பத்தையே கொன்று விடுவேன் என்பான் என்று.....உறுதியாக அக்கம்பக்கத்தில் உள்ள கஷ்மீரிகளுக்கு தெரியும் பக்கத்து வீட்டில் புதிதாக ஒருவன் வந்தால் இவன் இந்தியானா பாகிஸ்தானியா என்று தெரிந்து விடும் தெரிந்ததும் போலிஸுக்கோ அல்லது ராணுவத்திற்கோ தகவல் அளிக்கவேண்டும் (தகவல் அளிப்பவர் மற்றும் அவரின் குடும்பம் விபரங்கள் ரகசியம் காக்கப்பட வேண்டும்)இது தீவிரவாதத்தை கட்டுபடுத்த வழிவகுக்கும்.....இதுவே அவன் பாகிஸ்தானியாக இருந்தால் அவன் தரவுகளை சேகரித்து பாக் அரசிடமும், ஐநாவிடமும் அளித்துவிட்டு..... பாகிஸ்தானில் வசிக்கும் அவன் குடும்பத்தை அடையாளம் தெரியாதவர்களை கொண்டு வெச்சி செய்ய வேண்டும்.....ஒரு குடும்பத்தில் ஒருவன் தீவிரவாத வேலை செய்தால் அவன் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் செய்த வேலைக்கு கூலி கொடுக்க வேண்டும்.....!!!


Ramesh Sargam
ஆக 02, 2025 12:22

பயங்கரவாதி சுட்டுக்கொலை. இது சரியான செயல். இப்படி செய்வதை விட்டுவிட்டு கைது செய்வதெல்லாம் வேஸ்ட்.


குமார்
ஆக 02, 2025 11:52

திமுக காங்கிரஸ் கட்சிகள் போராட்டம் நடத்துவார்கள்.. மனித உரிமைக்கு எதிரான விதி மீறல் என போராடுவார்கள்


ராமகிருஷ்ணன்
ஆக 02, 2025 10:50

ராணுவ ஆப்பரேஷன்களுக்கு வைக்கப்படும் பெயர்கள் எல்லாம் திமுகவின் திராவிஷத்திற்கு எதிரான பெயர்களாக இருக்குதே, இதை கண்டித்து எதிர்ப்பு வரவில்லையே.


ஆரூர் ரங்
ஆக 02, 2025 10:13

பாகிஸ்தான் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கும் வரை பயங்கரவாததுக்கு ஆள் கிடைப்பதில் பஞ்சமிருக்காது. மூர்க்கமிருக்கும் வரை தூண்டிவிட மதப் பிரச்சாரகர்கள் இருப்பர்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஆக 02, 2025 10:41

காங்கிரஸும் திராவிட மாடலும் தீனி போட்டு வளர்க்கும்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை