உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆப்பரேஷன் சிந்துார் மூவர்ண கொடி பேரணி

ஆப்பரேஷன் சிந்துார் மூவர்ண கொடி பேரணி

சென்னை : 'ஆப்பரேஷன் சிந்துார்' வெற்றியை கொண்டாடும் வகையில், தமிழக பா.ஜ., சார்பில், மூவர்ண கொடி பேரணி, சென்னையில் நேற்று நடந்தது.சென்னை சிந்தாதிரிப்பேட்டை, எல்.ஜி., சாலை வழியாக, கட்சி கொடிகளை தவிர்த்து மூவர்ண கொடிகளை ஏந்தி, தமிழக பா.ஜ.,வினர் பேரணியாக நடந்து சென்றனர். அவர்கள் கையில் பிடித்திருந்த பேனரில், 'ஆப்பரேஷன் சிந்துார் வெற்றி கண்ட வீரர்களுக்கும், வெற்றிக்கு வித்திட்ட பிரதமர் மோடிக்கும் நன்றி' என, குறிப்பிடப்பட்டு இருந்தது. இப்பேரணியில், பா.ஜ., மாநில அமைப்பு பொதுச்செயலர் கேசவவிநாயகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி