உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழைய காப்பீட்டிலும் பயன் பெற வாய்ப்பு

பழைய காப்பீட்டிலும் பயன் பெற வாய்ப்பு

விருதுநகர் : அரசின் இலவச காப்பீடு திட்டத்தை ஸ்டார் ஹெல்த் நிறுவனம் மூலம் கடந்த அரசு செயல்படுத்தி வந்தது. இத்திட்டத்தை, புதிய அரசு மாற்றம் செய்து புதிய காப்பீடு திட்டத்தை அமல்படுத்தி, பழைய திட்டத்தை ரத்து செய்துள்ளது. இதனிடையே, புதிய திட்டம் செயல்படுத்தும் வரை பழைய திட்டத்தில் காப்பீடு அடையாள அட்டை பெற்றவர்கள் ஸ்டார் ஹெல்த் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ள ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இதற்கான தொகையை சம்பந்தப்பட்ட ஆஸ்பத்திரி நிர்வாகங்களுக்கு அரசு நேரடியாக வழங்கும், என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்