உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எதிர்க்கட்சிகள் போராட அனுமதி வழங்க வேண்டும் * கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்

எதிர்க்கட்சிகள் போராட அனுமதி வழங்க வேண்டும் * கார்த்தி சிதம்பரம் வலியுறுத்தல்

சென்னை:''எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கு, அரசு அனுமதிக்க வேண்டும்,'' என, காங்கிரஸ் எம்.பி., கார்த்தி சிதம்பரம் கூறினார்.அவர் அளித்த பேட்டி:பா.ஜ., ஆட்சி செய்யாத மாநிலங்களில் தொடர்ந்து மத்திய அரசு ஏஜென்சிகள் சோதனை செய்து வருகின்றன. எதிர்க்கட்சி தலைவர்கள் வீடுகளில் மட்டும், அமலாக்கத் துறை வாயிலாக நடவடிக்கை எடுக்கின்றனர்.அண்ணா பல்கலை விவகாரத்தில், முக்கிய குற்றவாளியை கைது செய்துள்ளனர். அவரை விசாரித்த பின், வேறு யார் தொடர்பில் உள்ளனர் என்பதை கண்டறிந்து, கைது செய்யலாம்; அது நடக்கும். தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும். லோக்சபாவில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். ஆனால், மத்திய அரசு எங்களை கருத்து கூற அனுமதிப்பதில்லை. அரசியல் கட்சிக்கு கருத்து கூற முழு சுதந்திரம் உண்டு. பொது மக்களுக்கு இடையூறு இன்றி போராட்டம் நடத்த விரும்பினால், அதற்கு அனுமதி வழங்க வேண்டும்.கூலிப்படை, மாபியா போன்ற குற்றங்களை, அரசால் கட்டுப்படுத்த முடியும். ஒரு தனிப்பட்ட நபரால் ஏற்படும் குற்றங்களை அரசால் தடுக்க முடியாது. நடிகர் விஜய்யின் நிலைப்பாடு குறித்து எனக்கு தெரியாது. நிலைப்பாடே இல்லாதவரை பற்றி என்னால் கருத்து சொல்ல முடியாது. கவர்னர் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தன்னுடைய விக்ரவாண்டி மாநாட்டில் தீர்மானம் போட்டவர் நடிகர் விஜய். ஆனால், அவரே கவர்னரை சந்தித்து, புகார் மனு அளிக்கிறார். கவர்னர் வேண்டாம் என் கிறவர், ஏன் கவர்னரை சந்திக்க வேண்டும்? எல்லாமே முரணாக உள்ளது. 'இண்டி' கூட்டணி வலுவாக உள்ளது. எல்லாரும் ஒரே மாதிரியான கருத்து கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை. மாற்று கருத்துகள் வரும்போது கூறலாம். அதனால் தான் தனித்தனி கட்சிகளாக இருக்கிறோம். ஒரே கருத்தாக கூறினால், அனைவரும் ஒரே கட்சியாக இருந்து விடலாமே.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !