உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றத்திற்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் 389 இடங்களில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றத்திற்கு எதிர்ப்பு; தமிழகம் முழுவதும் 389 இடங்களில் திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம்

சென்னை:100 நாள் வேலைத் திட்டத்தில் மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் 389 இடங்களில் திமுக கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.100 நாள் வேலைத் திட்டத்தில் மத்திய அரசு மாற்றங்கள் செய்ததை கண்டித்து திமுக கூட்டணி கட்சியினர் நடத்திய போராட்டங்களை முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அவரது அறிக்கை: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yb1713dc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தை மீட்டெடுக்கவும், தங்களது வாழ்வாதாரத்தைக் காத்துக்கொள்ளவும் தமிழகம் முழுவதும் 389 இடங்களில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்த ஏழை விவசாயக் கூலித் தொழிலாளர்கள்.இது தமிழகத்தில் இருந்து ஒலிக்கும் ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை, காந்தியின் மீது வெறுப்புணர்வோடு செயல்படும் மத்திய பாஜ ஆட்சியாளர்கள் உணர வேண்டும். ஏழைகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி