மேலும் செய்திகள்
கூட்டுறவு துறை துணை பதிவாளர்கள் இடமாற்றம்
23-Oct-2024
சென்னை:தமிழக உணவுத் துறையில், நுகர் பொருள் வாணிபக் கழகம் செயல்படுகிறது. இது ரேஷன் கடைகளில் வழங்கப்படும், அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்முதல் செய்கிறது. மேலும், மத்திய அரசின் சார்பில், விவசாயிகளிடம் இருந்து, நெல் கொள்முதல் செய்து, அரவை ஆலைகள் வாயிலாக, அரிசியாக மாற்றுகிறது. நுகர்வோர் வாணிபக் கழகத்தின், மண்டல முதுநிலை மேலாளர்கள், பொது மேலாளர் பணியிடங்களுக்கு, வருவாய்த் துறைகளில் இருந்தும், வாணிபக் கழகத்தில் பணிபுரியும் அதிகாரிகள், பதவி உயர்வு வாயிலாகவும் நியமிக்கப்படுவர். சமீப காலமாக, கூட்டுறவுத் துறை இணைப் பதிவாளர்கள், கூடுதல் பதிவாளர்கள், வாணிபக் கழக பணியிடங்களுக்கு நியமிக்கப்படுகின்றனர். இதற்கு வாணிபக் கழக ஊழியர்களிடம், கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது.இது குறித்து பணியாளர்கள் கூறுகையில், 'நுகர்பொருள் வாணிபக் கழகத்தில், 1,500 க்கும் மேற்பட்ட காலியிடங்கள் உள்ளன; அவற்றை விரைந்து நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வாணிபக் கழகத்தில் உள்ள பதவிகளுக்கு, வாணிபக் கழகத்தில் பணிபுரிவோருக்கான பதவி உயர்வு வழங்கி நியமிக்க வேண்டும். கூட்டுறவுத் துறை அதிகாரிகளை நியமிக்கக் கூடாது என, அரசிடம் வலியுறுத்தி உள்ளோம்' என்றனர்.
23-Oct-2024