உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கைது

நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கடலூர்: கடலூர் அருகே விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் ஊராட்சிக்குட்பட்ட மலையடி குப்பம், பெத்தான் குப்பம், கொடுக்கம்பாளையம் உள்ளிட்ட 4 கிராமங்களில் 160 ஏக்கர் விளைநிலங்கள் உள்ளன. இந்த விவசாய நிலங்களை கையகப்படுத்தி, தனியார் தோல் தொழிற்சாலைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பா.ஜ., உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக அகில இந்திய விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் உள்பட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். சண்முகம் உள்ளிட்ட கட்சியினர், விவசாய அமைப்பினரை போலீசார் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

மணி
மார் 21, 2025 14:07

இப்ப இருந்து ஆரம்பித்தால் சரியா இருக்கும்னு நினைப்பு


நாஞ்சில் நாடோடி
மார் 21, 2025 13:54

நடைபெறுவது காட்டாட்சி...


Palanisamy Sekar
மார் 21, 2025 13:45

கம்யூனிஸ்டுகளின் போராட்டம் நகைப்புக்கு உரியதே. இவர்களின் நோக்கம் திமுகவில் உள்ள பெரும் பணத்தை கறந்துவிட வேண்டும் என்பதாகவே இருக்கின்றது.


vivek
மார் 21, 2025 13:17

அப்போ டங்ஸ்டன் எதிர்ப்பு??? நாடகமா?


புதிய வீடியோ