உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யு.ஜி.சி., வரைவு விதிமுறைகளுக்கு எதிர்ப்பு; சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

யு.ஜி.சி., வரைவு விதிமுறைகளுக்கு எதிர்ப்பு; சட்டசபையில் தனித் தீர்மானம் நிறைவேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: யு.ஜி.சி., வரைவு விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபைக்கு முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.பல்கலை துணை வேந்தர் தேடல் குழுவில், மாநில அரசு பிரதிநிதியை நீக்கி, புதிய விதிமுறைகளை பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., வகுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மாநில அரசின் பல்கலைகளை கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைப்பது கெடு நோக்கம் கொண்டது; கல்வி தொடர்பான அதிகாரங்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்டவர்களிடம் இருக்க வேண்டும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=rnd7ay4c&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0புதிய விதிகளுக்கு எதிராக தேவையென்றால் கோர்ட்டை நாடுவோம்; கல்வி, மக்கள் மற்றும் எதிர்கால தலைமுறையைக் காக்க இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும். தன்னிச்சையாக துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரங்களை கவர்னருக்கு வழங்குவது சரி அல்ல. மாநில உரிமைகளில் தலையிடுவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை சிறுமைப்படுத்தும் செயல். மாநில அரசு தங்கள் சொந்த பணத்தில் கட்டிய பல்கலைக்கழகங்களை அபகரிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிடம் தான் கல்வி தொடர்பான அதிகாரங்கள் இருக்க வேண்டும். மத்திய அரசு கல்வித்துறையில் எதை செய்ய வேண்டுமோ அதை செய்யவில்லை. இவ்வாறு அவர் பேசினார். முதல்வர் கொண்டு வந்த தனித்தீர்மானத்திற்கு புரட்சி பாரதம், த.வா.க., கொ.ம.தே.க, காங்கிரஸ், ம.தி.மு.க, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. பின்னர் சட்டசபையில் யு.ஜி.சி., வரைவு விதிமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பா.ஜ., வெளிநடப்பு

யு.ஜி.சி., புதிய விதிகளுக்கு எதிராக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் நிருபர்கள் சந்திப்பில் பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் கூறியதாவது: யு.ஜி.சி., புதிய வரைவு தொடர்பான முதல்வரின் தீர்மானத்தை பா.ஜ., எதிர்க்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Laddoo
ஜன 10, 2025 07:12

நயா பைசாவுக்கு லாயக்கில்லா தீர்மானங்கள். அவை குப்பை


Laddoo
ஜன 09, 2025 17:06

ஏமாந்தால் டிரம்ப்க்கே எண்டு கார்டு போட்டு அமெரிக்காவுக்கே அனுப்புவான்கள். முடிந்தால் இஸ்ரேலையே ஒழித்துக்கட்ட தீர்மானம் போடுவானுங்க.


Rajan A
ஜன 09, 2025 16:48

இவர்கள் எதிர்த்தால் அது நல்ல திட்டம் என்ற முடிவுக்கு மக்கள் எப்போதோ வந்துவிட்டார்கள்


Suppan
ஜன 09, 2025 16:32

துணை வேந்தர் பதவிகளை ஏலம் விடும் அளவுக்கு சென்ற கேடு கெட்ட திராவிடக்கட்சிகள் இந்த கட்டுப்பாட்டை எதிர்ப்பதில் ஆச்சரியம் இல்லை.


krishna
ஜன 09, 2025 15:57

ENGE ENGE GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI OOPIS CLUB BOYS THALAI VAIKUNDESWARAN MATTRUM VENUGOPAL VELAN IYENGAR PONDRA KOMALI KUMBAL.UDAN UGC EDHIRAAGA NAADE ADHIRA VAIKKUM OORAATAM UDANE.OSI QUARTER BONUS.COMMON START.


Kumar Kumzi
ஜன 09, 2025 15:14

யு ஜி சி என்றல் துண்டுசீட்டுக்கு என்ன அருத்தம்னு தெரியுமா ஹீஹீஹீ ஐயோ பாவம்


Kasimani Baskaran
ஜன 09, 2025 15:04

சம்பளம் கொடுப்பது மத்திய அரசு. ஆனால் மாநில அரசுக்கு யார் துணை வேந்தர் என்பதை தீர்மானிக்கும் உரிமை வேண்டும்... அதாவது ஊழல் செய்ய / விலை நிர்ணயிக்க உரிமை வேண்டும்...


Madras Madra
ஜன 09, 2025 14:50

பல்கலை கழக வேலைகள் லட்ச கணக்கில் விலைக்கு விற்கப்ப ட்டது எப்படி உருப்படும்


Madras Madra
ஜன 09, 2025 14:48

ஒரு சபை கிடைச்சிடுச்சு தீர்மானமா போட்டு தள்ளு துட்டா காசா


ஆரூர் ரங்
ஜன 09, 2025 14:37

எப்போதும் இல்லாத அளவுக்கு ஊழல் வழக்குகளில் துணை வேந்தர்கள் சிக்கியுள்ளனர். பலர் தண்டிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் ரெய்டு நடந்த போது லஞ்ச ரூபாய்களை கிழித்து விழுங்க முயன்றார். இன்னொரு து.வே. பணத்தைக் கிழித்து .. போட்டார். மேலும் மேலும் மாநில அரசுகள் ஊழல் ஆட்களை நியமிக்க முயல்வதை நிறுத்த யுஜிசி கட்டுப்பாடுகளை விதிக்கிறது. அது திமுக வுக்கு கசப்பதில் ஆச்சர்யமில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை