உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வாயுக்கசிவு விவகாரம்: பள்ளியிலிருந்து 35 முயல்களை அகற்ற உத்தரவு

வாயுக்கசிவு விவகாரம்: பள்ளியிலிருந்து 35 முயல்களை அகற்ற உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவொற்றியூர்: வாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்படும் திருவொற்றியூர் தனியார் பள்ளியில் வளர்க்கப்பட்டு வரும், 35 முயல்களையும் அகற்ற, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளை திறப்பது குறித்து, இன்று மாணவர், பெற்றோருடன், அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளனர்.

மீண்டும் விடுமுறை

திருவொற்றியூர் கிராமத் தெருவில், விக்டரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், எல்.கே.ஜி., முதல், பிளஸ் 2 வரை, 1,970 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.இந்த பள்ளியில், அக்., 25ல் வாயு கசிவு ஏற்பட்டதாக, 45 மாணவியர் மயங்கி விழுந்தனர். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.பள்ளி மீண்டும் நவ., 5ல் திறக்கப்பபட்டது. அன்றும், வாயு கசிவு ஏற்பட்டதாக, 10 மாணவியர் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால், பள்ளிக்கு மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.இரண்டு முறை வாயு கசிவு ஏற்பட்டதாக பிரச்னை ஏற்பட்டதால், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், காற்றின் மாசு அளவை கண்காணித்தனர். நவ., 4 - 8 ம் தேதி வரை கண்காணிப்பு தொடர்ந்தது.முதற்கட்ட ஆய்வில், வாயு கசிவு இல்லை என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்தது. இரண்டாம் கட்ட ஆய்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.இந்நிலையில், பள்ளி திறப்பு தொடர்பாக, தண்டையார்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் தலைமையில், திருவொற்றியூரில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில், நேற்று மதியம் கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.

நடவடிக்கை

இதில், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வாசுதேவன், கேசவமூர்த்தி, மண்டல குழு தலைவர் தனியரசு, தாசில்தார் சகாயராணி, மண்டல நல அலுவலர் லீனா, பள்ளி தாளாளர் லாரன்ஸ், முதல்வர் ரூத் வனிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஆலோசனைக்குப்பின், வருவாய் கோட்டாட்சியர் இப்ராஹிம் அளித்த பேட்டி:பள்ளி நிர்வாகம் தரப்பில், வாயு கசிவு ஏற்படவில்லை எனவும், முதலில், 10, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் துவங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோரை அழைத்து, இன்று ஆலோசனை நடத்த உள்ளோம். விரைவில் வகுப்புகள் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.பள்ளியில் வாயு கசிவு ஏதும் இல்லை என, மாசு கட்டுபாட்டு வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. முழு அறிக்கை விரைவில் வெளியாகும்.பள்ளி வளாகத்தில், 35 முயல்கள் வளர்க்கப்படுவதாகவும், அதன் எச்சங்கள் வழியாக, இந்த பாதிப்பு ஏற்படலாம் எனவும் கூறப்படுகிறது. எனவே, முயல்களை அகற்ற உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையே, வாயு கசிவு விவகாரத்திற்கு, சதி வேலை காரணமா என்ற கோணத்தில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Ramesh Sargam
நவ 12, 2024 13:31

கரண்ட் போனால் அணில் மீது பழியை போடுவார்கள். இப்பொழுது வாயுக்கழிவுக்கு முயல் மீது பழி. ஆகா மொத்தத்தில் மக்கள் அவர்கள் தவறை ஒப்புக்கொள்ளமாட்டார்கள். பேசமுடியாத ஜீவன்கள் மீது பழிபோட்டு தப்பித்துக்கொள்வார்கள். எனக்கு என்னமோ அந்த கல்வி வளாகத்தில் ஆட்டோ ஷங்கர் நிகழ்வு போல ஏதோ பெரிய தவறு நடக்கிறதோ என்று ஒரு சந்தேகம், அச்சம். தீர விசாரிக்கவும்.


ஆரூர் ரங்
நவ 12, 2024 11:42

அணில் குட்டி போட்டு இப்போ முயலா மாறிடுச்சு. காலக் கொடுமை.


sridhar
நவ 12, 2024 11:11

முயல்கள் மூச்சு விடும்போது வெளியேறிய கொடிய நச்சு வாயு தான் காரணம் . பள்ளி kaaranam இல்லை . விசாரித்ததில் அத்தனையும் முயல்கள் என்று தெரிய வந்துள்ளது .


வைகுண்டேஸ்வரன்
நவ 12, 2024 10:50

இது தினப் பத்திரிகையா? ஒரே மதவாதம் கொழுந்து விட்டு எரிகிறதே. ஆனால் இப்படித்தான் இருக்கணும். அப்போது தான் தமிழ் நாட்டில் பாஜக ஒருநாளும் வெற்றி பேராது.


Kannan Chandran
நவ 12, 2024 10:12

நம்புங்க, முயல் எச்சத்திலிருந்து தினமும் பத்து சிலிண்டர் கேஸ் எடுத்து சவுதி அரேபியாவிற்கே சப்ளை செய்கிறார் நமது விடியல்.


Bhaskaran
நவ 12, 2024 09:32

முயல்களை அதிகாரிகள் பங்கு போட்டுக்குவாங்க லஞ்சத்துக்கு கொசுறு


Bhaskaran
நவ 12, 2024 09:30

முயல் கால் பிரச்சனை என்ற அதிகாரியை முயல் பண்ணையில் கழிவு வார விடனும் எவ்வளவு லஞ்சம் வாங்கினானோ படுபாவி


GMM
நவ 12, 2024 09:17

பள்ளி வளாகத்தில் 35 முயல்கள். வளாகத்தில் முயல் வளர்க்க அனுமதி உண்டா? வன அலுவலர் அறிக்கை கொடுக்க வேண்டும். மேலும் மாநில நிர்வாக துறைகள் ஆளும் கட்சியின் ஊதுகுழல். அண்டை மாநில கூட்டு குழு அல்லது மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும். பத்மா சேஷாத்ரி, கலா நிலையம் நடவடிக்கைகள் முற்றிலும் மாநில ஆளும் கட்சியை குளிர்விக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள். பள்ளியில் மாசு கட்டுப்பாடு வாரியம் முதல் அறிக்கை ஏன்? 45 மாணவியர் மயக்கம். போலீஸ், நீதிமன்ற நடவடிக்கை தான் முதலில் இருக்கும். மாசு முதலில் நிற்கிறது. சிறுபான்மை அந்தஸ்து காரணமோ?


sundararajan
நவ 12, 2024 08:37

இதுவே ஹிந்துப் பள்ளியாக இருந்தால் பள்ளி நிர்வாகி கைது. பள்ளியை அரசு ஏற்று நடத்த ஆலோசனை என்று அறிக்கை வந்திருக்கும். மாணவர்கள் உயிரை விட சிறுபான்மை எனும் ஓட்டுகே கடவுள் முக்கியம். பார்த்து லாரன்ஸ் மற்றும் வனிதா ஆகியோரிடம் அன்புக் கோரிக்கை வைக்கவும். கொஞ்சம் குரலை உயர்த்தினால் கூட சிறுபான்மை கோபப்படும் .


HoneyBee
நவ 12, 2024 08:32

கரெண்ட்க்கு . நல்லா விடிஞ்சது... அடிச்சி விடுங்க... எல்லாத்திலயும் மதம் ஜாதியை வைத்து.. தலை குனிய வேண்டும்


சமீபத்திய செய்தி