வேட்டி, சேலை பணி டிச., 31க்குள் முடிக்க உத்தரவு
சென்னை : பொங்கல் பண்டிகையை ஒட்டி, வேட்டி, சேலை வழங்கும் திட்டம், முதியோர், ஓய்வூதிய பயனாளிகளுக்கு வேட்டி சேலை வழங்கும் திட்டம் குறித்த ஆய்வுக் கூட்டம், நேற்று தலைமை செயலகத்தில் நடந்தது.அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், காந்தி மற்றும் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த, விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு தேவையான, வேட்டி, சேலைகள் தயாரிப்பு பணிகளை, வரும் டிச., 31க்குள் முடிக்கும்படி, விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.