உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  புதிய ரேஷன் கார்டுகளை விரைவாக வழங்க உத்தரவு 

 புதிய ரேஷன் கார்டுகளை விரைவாக வழங்க உத்தரவு 

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து, பயனாளிகளுக்கு கார்டுகள் வழங்க வேண்டும்' என, உணவு துறை அமைச்சர் வெங்கடரமணன், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மானிய விலை பொருட்களை வாங்கவும், பொங்கல் பரிசு, பேரிடர் நிவாரணம் வாங்கவும், ரேஷன் கார்டு அவசியம்; இதை, உணவு வழங்கல் துறை வழங்குகிறது. உணவு துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வெங்கடரமணன், சென்னை எழிலகத்தில் உள்ள உணவு வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது, 'புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுத்து, பயனாளிகளுக்கு புதிய கார்டுகளை விரைவாக வழங்க வேண்டும். 'ரேஷன் கடைகள் குறித்த நேரத்தில் திறக்கப்படுவதையும், தரமான பொருட்கள் வழங்கப்படுவதையும் உறுதிசெய்ய வேண்டும்' என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !