உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 2026 மட்டுமல்ல 2031, 2036லும் நம் ஆட்சி தான்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

2026 மட்டுமல்ல 2031, 2036லும் நம் ஆட்சி தான்; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பத்தூர்: ''2026ம் ஆண்டு மட்டுமல்ல, 2031, 2036ம் ஆண்டாக இருந்தாலும் என்றைக்கும் நாம் தான் இந்த நாட்டை ஆளப்போகிறோம்'' என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.திருப்பத்தூர் மாவட்டத்தில் ரூ.174.39 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பல்வேறு சிறப்புகள் கொண்ட திருப்பத்தூரில் நடைபெறும் விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி. பல்வேறு சிறப்புகள் கொண்ட மாவட்டம் திருப்பத்தூர். தோல் தொழிற்சாலைகளின் ஏற்றுமதி மூலம் வருவாயை உயர்த்தி வேலைவாய்ப்பு தரும் மாவட்டம் திருப்பத்தூர்.

9.69% வளர்ச்சி

தமிழக வரலாற்றில் இல்லாத வகையில், திட்டங்களை செயல்படுத்தி கொண்டு இருக்கிறோம். செய்து கொண்டே இருப்போம். அதனால் தான் மக்கள் அன்பை வாரி வழங்கி கொண்டு இருக்கிறார்கள். இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட தமிழகம் 9.69% வளர்ச்சியுடன் பொருளாதாரத்தில் உச்சமடைந்துள்ளது. நாட்டின் வளர்ச்சியில் 100ல் சுமார் 10% நாம் இருக்கிறோம்.

பணவீக்கம்

சமூக முன்னேற்றம், உயர் கல்வி சேர்க்கையில் முதலிடத்திலும், வறுமையில்லா நிலையை உருவாக்குவதில் இரண்டாம் இடத்திலும், நீடித்த வளர்ச்சி, மருத்துவக் குறியீட்டில் மூன்றாமிடத்திலும் தமிழகம் உள்ளது. பணவீக்கம் குறைந்த மாநிலமாகவும், அதிக நகரமயமாக்கப்பட்ட மாநிலமாகவும் திகழ்கிறது. தலைநகரில் மட்டுமல்லாது அத்தனை பகுதிகளிலும் வளர்ச்சி திட்டங்கள் செய்ததே இதற்கு அடிப்படை காரணம்.

2031, 2036ம் ஆண்டு..!

மக்களின் வரவேற்பை பார்க்கும் போது, கொஞ்சம் இருமாப்பு உடன், பெருமையுடன் சொல்ல விரும்புவது, 2026ம் ஆண்டு மட்டுமல்ல, 2031, 2036ம் ஆண்டாக இருந்தாலும் என்றைக்கும் நாம் தான் இந்த நாட்டை ஆளப்போகிறோம். கடந்த கால ஆட்சியாளர்களால், சீரழிந்த தமிழகத்தின் வளர்ச்சியை, தி.மு.க., அரசு 4 ஆண்டுகளில் மீட்டெடுத்துள்ளது.

சுற்றுப்பயணம்

தமிழகத்தை வரலாறு காணாத வளர்ச்சிக்கு கொண்டு சென்று இருக்கிறோம். தமிழகத்திற்கு ஓரவஞ்சம் செய்யும் மத்திய அரசால் கூட நமது வளர்ச்சியை மறைக்க முடியவில்லை. நான் கோட்டையில் இருந்து மட்டும் பணிகளை செய்யவில்லை. மாவட்டங்களுக்கு தொடர்ந்து சுற்றுப்பயணம் சென்று கொண்டு இருக்கிறேன். பா.ஜ., மற்றும் அ.தி.மு.க.,வினர் மக்களை பற்றி கவலைப்படாமல் மதத்தை பற்றி கவலைப்படுகிறார்கள். இது தான் அவர்கள் அரசியல். தமிழகத்தில் மதத்திற்கு ஆபத்து என்று அ.தி.மு.க.,வை வைத்து கொண்டு பா.ஜ.,வினர் பேசுகிறார்கள். தமிழகத்தில் தற்போது பா.ஜ., கூட்டணிக்கு தான் ஆபத்து. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 58 )

Raghavan
ஜூலை 01, 2025 13:04

வீட்டில் உட்க்கார்ந்து வடை சுடவேண்டியதுதான். தமிழகத்தை ஒரு தமிழன் தான் ஆளவேண்டும். தெலுங்கு இங்கு என்ன வேலை. ஒரு தமிழன் போய் தெலுங்கு தேசத்தை ஆளவிட்டுவிடுவார்களா.


Mohanakrishnan
ஜூன் 27, 2025 21:45

ஆமாம் ஒரு தமிழன் ஆள்வான் ஆனால் தெலுங்கன் கூட்டம் இல்லை இது தெரிஞ்சுதான் ஒரு கூட்டம் உளறுகிறது


Narayanan
ஜூன் 27, 2025 16:10

மக்கள் வாக்கு பெட்டியை மாற்றிவிடும் தந்திரம் இனியும் நடக்கும் என்று நினைக்கிறார் . மத்திய அரசு விழிப்புடன் 4 மணிக்கே மத்திய போலீஸ் படை அனைத்து வாக்கு பெட்டிகளையும் கண்காணிக்க வேண்டும் . மத்திய அரசின் பாதுகாப்பில் மட்டுமே வாக்கு பெட்டிகள் இருக்க வேண்டும்.தமிழக போலீஸ் வசம் இருக்க கூடாது .


theruvasagan
ஜூன் 27, 2025 08:53

நம் ஆட்சினா என்ன அர்த்தம். அவங்க நினைப்புப்படி மன்னர் ஆட்சி போல பரம்பரை ஆட்சி. அதே துதி பாடிகள். அதே அடிமை சேவகர்கள். 2050ல் கூட கடைக்கோடி தொண்டனுக்கு பசைவாளியோட போஸ்டரும் கையுமா அலையற வேலைதான். அதே 200 ஓவாதான்.


சாமானியன்
ஜூன் 27, 2025 08:17

அப்பப்ப நகைச்சுவையாக பேசுவார் பொல்லாத முதல்வர். கண்டுக்காதீங்க.


பேசும் தமிழன்
ஜூன் 27, 2025 08:12

ஆசை.... தோசை... அப்பளம்... வடை.... ஒருமுறை தான் மக்கள் ஏமாறுவார்கள்.... தெரிந்தே தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளி போட்டு கொள்ள முன்வருவார்களா ???


Thravisham
ஜூன் 27, 2025 07:17

மக்கள் செத்து சுண்ணாம்பாகி விடுவர்


M Ramachandran
ஜூன் 26, 2025 20:12

தமிழ் நாட்டில் வீர வசனம் பேசி விட்டு டில்லிக்கு காவடி தூக்குவது எதற்கு ?


M Ramachandran
ஜூன் 26, 2025 20:10

டைல் நாட்டைய்ய கொல்லையயடித்து குட்டிச்சுவராக்கி விட்டு வீணா போனவன் போல பேச்சு எதற்கு? ஓங்கோலுக்கு திருப்தியுடன் ஒட்டம் பிடிப்பது நன்று. சென்று விடுவது உத்தமம். இன்னும் சுரண்ட தமிழ் நாட்டிலல் மிச்சம் இருக்கா? கடன் தான் தமிழன் ஓவொருத்தன் தலை மீது இருக்கு .


surya krishna
ஜூன் 26, 2025 19:35

impossible, do you think you can buy voters?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை