உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்னும் நடக்கும் குழந்தை திருமணங்கள்; ஒராண்டில் மட்டும் 3 ஆயிரம் புகார்கள்!

இன்னும் நடக்கும் குழந்தை திருமணங்கள்; ஒராண்டில் மட்டும் 3 ஆயிரம் புகார்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும், 3 ஆயிரம் குழந்தை திருமண புகார்கள் வந்துள்ளன. அதன்படி, 1,995 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வாயிலாக தெரியவந்துள்ளது.தமிழகத்தில் கடந்தாண்டு, நிகழ்ந்த குழந்தை திருமணங்கள் குறித்து, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக கிடைத்த தகவல்கள் பின்வருமாறு: தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும், 3 ஆயிரம் குழந்தை திருமண புகார்கள் வந்துள்ளன. அதன்படி, 1,995 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது. 1,054 குழந்தை திருமணங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக, 808 எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிக புகார்கள் வந்த முதல் 5 மாவட்டங்கள்!

* நாமக்கல்- 171 புகார்கள்* கடலூர்- 150 புகார்கள்* சேலம்- 143 புகார்கள்* திண்டுக்கல்- 175 புகார்கள்* தேனி- 161 புகார்கள்

குழந்தை திருமணங்கள் நடந்த முதல் 5 மாவட்டங்கள்!

* நாமக்கல்- 117 திருமணங்கள்* ஈரோடு- 62 திருமணங்கள்* கடலூர்- 56 திருமணங்கள்* திண்டுக்கல்- 54 திருமணங்கள்* கோவை- 46 திருமணங்கள்இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தமிழகத்தில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. குழந்தை திருமணம் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும். குழந்தை திருமணங்கள் அதிக எண்ணிக்கையில் நடக்கும் பகுதியில் அதிகாரிகள் கவனம் செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு பெண் உடல், 21 வயதில் தான் முழுமையாக வளர்ச்சியடைகிறது. ஆரம்பகால கர்ப்பம், குறிப்பாக 21 வயதுக்கு முன் கர்ப்பம் தரித்தால், தாய் மற்றும் குழந்தைக்கு உடல்நல சிக்கல்கள் அதிக ஆபத்து உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Dwaragan
நவ 19, 2024 09:42

பெண்ணின் திருமண வயதை உயர்த்தலும்


joekumar
நவ 18, 2024 20:06

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது இரு குடும்பங்கள் நடந்த திருமணங்களை சட்டம் என்ற பெயரில் தடுக்க உங்களுக்கு உரிமை இல்லை பல நாடுகளில் 16 வயதிலேயே திருமணம் செய்யலாம் என்று தான் சட்டம் உள்ளது நீங்களே பெயர் வைத்துக் கொள்ள வேண்டாம் குழந்தை திருமணம் என்று அவர்களுக்கு முழுமையான முடிவு எடுக்கும் எண்ணம் 25 வயதில் தான் வந்து சேரும் அப்படி என்றால் நீங்கள் 25 வயது தான் திருமண வயதாக அறிவிக்க வேண்டும்


என்றும் இந்தியன்
நவ 18, 2024 16:37

இரண்டு சைட் பெற்றோர் விருப்பப்படி இது நடந்தால் அதில் தவறேதுமில்லை. அப்படி இல்லாமல் முறை தவறி நடந்திருந்தால் மட்டுமே தவறு சட்டப்படி என்று சொல்லவேண்டும். இப்போ தான் மஹாராஷ்ட்ரா உயர் நீதிமன்றம் சென்ற மாதம் அனுமதி அளித்துள்ளதே "முஸ்லிம்கள் இரண்டாவது திருமணத்தை ரெஜிஸ்டெர் செய்து கொள்ளலாம்" என்று.


sankar
நவ 18, 2024 13:51

ஒன்பது வயசுலயே பெண் திருமணம் செய்ய வேண்டும் என்று ஒரு நாடு சட்டம் இயற்றி இருக்கிறது


Ramesh Sargam
நவ 18, 2024 13:17

இந்த காலத்திலும் போதிய படிப்பறிவு இல்லாத மக்கள் உள்ளனர்.


சுந்தரம் விஸ்வநாதன்
நவ 18, 2024 13:05

இதுல சமுக நீதி கடைப்பிடிக்கப்பட்டதா என்பதை முதலில் கண்டறிய வேண்டும் .


mei
நவ 18, 2024 12:45

இதிலமுஸ்லீம் திருமணங்களும் அடங்குமா


வைகுண்டேஸ்வரன்
நவ 18, 2024 13:13

நீங்கள் நாடி நரம்பெல்லாம் ஊறிப்போய்... மூளை அழுகியவராகி இருப்பது தெரிகிறது. படித்தவர் தானே நீங்கள்??


என்றும் இந்தியன்
நவ 18, 2024 16:40

முஸ்லீம் மனிதன் இல்லை மனித வடிவில் இருக்கும் ஒரு முஸ்லீம் மட்டுமே மற்றும் இந்தியனும் அல்ல அவ்வளவே. ஆகவே இந்த சட்டம் முஸ்லிம்களுக்கு பொருந்தாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை