உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை, மதுரை, கோவை, துாத்துக்குடி மின் வழித்தடங்களில் ஓவர்லோடு பிரச்னை

சென்னை, மதுரை, கோவை, துாத்துக்குடி மின் வழித்தடங்களில் ஓவர்லோடு பிரச்னை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அனல், நீர் உள்ளிட்ட மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரம், 400 கிலோ வோல்ட், 230, 110, 33/ 11 கிலோ வோல்ட் திறன் துணை மின் நிலையங்களுக்கு, அதே திறன் உடைய மின் வழித்தடங்கள் வாயிலாக, பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்லப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது. சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மட்டுமின்றி, மாநிலம் முழுதும் நகரமயமாக்கல் அதிகம் உள்ளது. அதற்கு ஏற்ப, அனைத்து பகுதிகளிலும் மின் தேவை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் எந்தெந்த இடங்களில் உள்ள மின் வழித்தடங்களில், 'ஓவர்லோடு' காணப்படுகிறது என்ற விபரத்தை, மத்திய மின்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, கடலுார் மாவட்டம் நெய்வேலி, செங்கல்பட்டு களிவந்தப்பட்டு, திருப்பூர் உடுமலைப்பேட்டை, கோவை அரசூர், சேலத்தில் செல்லும், 400 கிலோ வோல்ட் வழித்தடங்களிலும் மற்றும் சென்னை, கடலுார் நெய்வேலி, கோவை, துாத்துக்குடி, மதுரை, ஓசூரில் செல்லும், 230 கி.வோ., வழித்தடங்களிலும், 'ஓவர்லோடு' எனப்படும் அதிக மின் பளு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், திருச்சி மாவட்டத்தில், 'லோ வோல்டேஜ்' எனப்படும் குறைந்த மின்னழுத்தம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு, மத்திய மின் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'எதிர்கால மின் தேவையை பூர்த்தி செய்ய, சென்னை உட்பட பல்வேறு இடங்களிலும் புதிய துணை மின் நிலையங்களும், மின் வழித்தடமும் அமைக்கப்பட்டு வருகின்றன. மத்திய மின் துறை தெரிவிக்கும் இடங்களில், புதிய மின் வழித்தடங்கள் அமைக்கவும், அங்குள்ள துணை மின் நிலையங்களில் கூடுதல் மின்சாரத்தை கையாளவும் புதிய பவர் டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்படுகின்றன' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

RRR
ஆக 22, 2025 09:55

எங்கள் ஊர் தூத்துக்குடியில் அனல்மின் நிலையம் இருக்கு... ஆனா... அதை நினைச்சு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. எங்கள் ஊரில் எந்த நேரமும் மின்சாரம் துண்டிக்கப்படுவதும் மீண்டும் சற்று நேரம் கழித்து வருவதும் சகஜம். ஒரு நாளில் பலமுறை சுமார் 20முறை கரண்ட் கட் நிகழ்வதுண்டு. ஒவ்வொரு முறையும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மீண்டும் வரும்போதெல்லாம் லோ வோல்ட்டேஜ் மின்சாரத்தால் நாங்கள் படும் அவதி சொல்லி மாளாது. மின்சாரத்தைப் பொறுத்தவரை தமிழகம் சற்றும் வளரவேயில்லை. 1970-80களில் எப்படி இருந்ததோ அதே நிலைதான் இன்றும் உள்ளது. இன்வெர்டர் என்ற ஒரு கருவி மட்டும் இல்லையென்றால் மக்களின் கதி அதோகதிதான்.


Vasan
ஆக 22, 2025 05:25

Till the year 2015, Southern grid was operating in island mode, while North/East/Western grids were operating as a single grid NEW grid. From 2015, all the Indian grids were synchronized to make it NEWS grid. Since then, the Southern states especially Tamilnadu is able to draw huge quantity of power from elsewhere in India. This ability to compensate the regional deficit from Rest of India helped in mitigating the power deficit, which the TN Govt started claiming as power surplus. Had this grid synchronization in the previous decade itself, DMK Govt wouldnt have lost power elections in the year 2011 because of power electricity. So, power decides power.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை