உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உற்சாகத்துடன் நடந்தது பாலமேடு ஜல்லிக்கட்டு; 14 காளை அடக்கிய பார்த்திபன் முதலிடம்!

உற்சாகத்துடன் நடந்தது பாலமேடு ஜல்லிக்கட்டு; 14 காளை அடக்கிய பார்த்திபன் முதலிடம்!

மதுரை: புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டில் 12 காளைகளை அடக்கிய பார்த்திபன் முதலிடத்தில் உள்ளார். தலா 12 காளை அடக்கிய துளசி இரண்டாமிடம், 11 காளை அடக்கிய பிரபா மூன்றாமிடத்தில் உள்ளனர்.பொங்கல் திருவிழாவின் முக்கிய அம்சமாக மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் நேற்று (ஜன.14) ஜல்லிக்கட்டு போட்டி உற்சாகமாக நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மாட்டு பொங்கல் தினமான இன்று (ஜன.15) புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது.அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=odottl87&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0முன்பதிவு செய்யப்பட்ட காளைகள் மற்றும் வீரர்களுக்கு என மொத்தம் 120 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். காளையின் உடல்நிலை, பதிவு எண், கொம்பின் அளவு உள்ளிட்ட அம்சங்கள் சரிபார்க்கப்பட்டன.பரிசோதனையின் போது அப்பகுதியில் திடீரென மின்தடை ஏற்பட்டது. சிறிது நேரத்தில் போலீசாருக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட, அவர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர்.அதன் பின்னர், உறுதி மொழி ஏற்கப்பட்டு, மகாலிங்கசாமி மடத்துகாளை கோவில் காளையாக அவிழ்த்து விடப்பட்டது. பிறக்கு வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டன. துள்ளி திரிந்த காளைகளுக்காக காத்திருந்த காளையர்கள் அதை அடக்கி தீரத்தை வெளிப்படுத்தினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களின் கைகளில் அகப்படாமல் துள்ளி திமிறின. கடைசி சுற்றுக்கு முந்தைய சுற்று நிலவரப்படி, 14 காளை அடக்கிய பார்த்திபன் முதலிடத்தில் உள்ளார். 12 காளை அடக்கிய துளசி இரண்டாமிடம், 11 காளை அடக்கிய பிரபா மூன்றாம் இடத்தில் உள்ளனர். போட்டியில் இதுவரை 53 பேர் காயம் அடைந்துள்ளனர். இன்றைய ஜல்லிக்கட்டில் முதல் பரிசாக சிறந்த காளைக்கு முதல்வர் ஸ்டாலின் சார்பில் டிராக்டர் பரிசாக அளிக்கப்பபட உள்ளது. முதல் பரிசு பெறும் சிறந்த மாடுபிடி வீரருக்கு துணை முதல்வர் உதயநிதி சார்பில் சொகுசு கார் பரிசளிக்கப்படுகிறது.2வது பரிசு பெறும் காளைக்கு கன்றுடன் கூடிய நாட்டுப்பசுவும், மாடுபிடி வீரருக்கு பைக்கும் பரிசாக அளிக்கப்படுகிறது. இதுதவிர, அண்டா, சைக்கிள், தங்க நாணயம், டிவி, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களும் பரிசாக தரப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

venugopal s
ஜன 15, 2025 20:07

பாலமேடு ஜல்லிக்கட்டில் மாடு முட்டி எவரும் சாகவில்லையே என்று சங்கிகள் வயிற்றெரிச்சல் படுவது நன்றாகவே தெரிகிறது!


vbs manian
ஜன 15, 2025 15:37

அது எப்படி சார் எல்லா சே ந ல்களிலும் ஜல்லிக்கட்டு மட்டுமே ஒளிபரப்பு. வேறு செய்தியே இல்லையா. இப்படி அடங்கி ஒடுங்கி இருக்க வேண்டாம்.


sundarsvpr
ஜன 15, 2025 12:19

துள்ளி நிமிர்ந்து வரும் காளைகள் அடக்கும் வீரர்களுக்கு துன்பம் விளைவிக்கக்கூடாது. இது விளையாட்டு. யுத்தம். அல்ல. காளைகளை ஆன்மிக உணர்வு ஏற்படும் வகையில் தீவனங்கள் வளர்க்கவேண்டும். இது வீரர்களுக்கும் பொருந்தும். வெறி உணர்வு ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்கவேண்டும்.


Svs Yaadum oore
ஜன 15, 2025 10:46

எல்லா டி.வி சேனல்களிலும் ஜல்லிக்கட்டையே காமிச்சு ஜல்லியடிக்கிறார்களாம் ....


Svs Yaadum oore
ஜன 15, 2025 11:42

மாட்டு கயிறை பிடித்து கொண்டு பாயம்மா மேரியம்மாவுடன் போஸ் கொடுத்து போட்டோ ஷூட் நடத்தி , சமத்துவ மாட்டு பொங்கல் இதுதான் சமூக நீதி என்று மத சார்பின்மையாக விளம்பரம் செய்யலாம் ....


Kasimani Baskaran
ஜன 15, 2025 10:12

சைமனை இறக்கிவிட்டு கூட பிரச்சினை தீரவில்லை என்றால் விரக்தியில் அண்ணா பல்கலை சாமாச்சாரத்துக்கு முடிவு கட்ட நாள் முழுவதும் ஜல்லிக்கட்டு காட்டச்சொல்லி மேலிடத்து உத்தரவால் பல டீவி நிறுவனங்கள் கலகலத்து இருக்கிறதாம். முடிந்தால் சன் டீவி கூட பிக் பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பும்.


அப்பாவி
ஜன 15, 2025 08:46

அதுக்குன்னு எல்லா டி.வி சேனல்களிலும் ஜல்லிக்கட்டையே காமிச்சு ஜல்லியடிக்குறது நல்லாவே இல்லை.


ஆரூர் ரங்
ஜன 15, 2025 09:30

அது நிதி குடும்பத்தின் கட்டாய உத்தரவு. RSB ஊடகங்களுக்கு வேறு வழியில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை