உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  பழனிசாமிக்கும் தனியாக ஒரு எஸ்.ஐ.ஆர்., உள்ளது

 பழனிசாமிக்கும் தனியாக ஒரு எஸ்.ஐ.ஆர்., உள்ளது

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு உண்மை பேசி பழக்கமே இல்லை. அண்ணாதுரையை நாங்கள் மதித்தது போல், உலகில் எவரும் மதித்தது இல்லை. அண்ணாதுரை பெயரை எங்கெல்லாம் வைக்க வேண்டுமோ, அங்கெல்லாம் வைத்து விட்டோம்; இனி வைப்பதற்கு இடமே இல்லை. பழனிசாமி தான், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரை மறந்து விட்டார். 'புரட்சித் தமிழர்' என்ற பட்டத்தை பழனிசாமி தனக்குத்தானே சூட்டிக் கொண்டிருக்கிறார். அப்படியென்றால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் தமிழர் இல்லையா?பழனிசாமிக்கும் தனியாக ஒரு எஸ்.ஐ.ஆர்., உண்டு. அவர் கட்சியில், கடந்த பொதுக்குழுவுக்கும், இந்த பொதுக்குழுவுக்கும் இடையே யாரெல்லாம் இருந்தனர்; யாரெல்லாம் வேறு கட்சிக்கு சென்றனர் என கணக்கெடுப்பது தான், பழனிசாமியின் எஸ்.ஐ.ஆர்., இம்மாத இறுதிக்குள் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவிப்பார். அதை வைத்து பிரசாரம் செய்தாலே, தி.மு.க., எளிதாக வெற்றி பெறும். - ஆர்.எஸ்.பாரதி அமைப்பு செயலர், தி.மு.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ