பகல் கனவு காண்கிறார் பழனிசாமி தினகரன் குற்றச்சாட்டு
ராமநாதபுரம்: ''தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் பழனிசாமி ஆட்சியை பிடிக்க முடியாது. அவர் பகல் கனவு காண்கிறார்'' என ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய அ.ம.மு.க., பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: மதுரை விமான நிலையத்திற்கு தேவர் பெயர் வைக்க அனைத்து தரப்பு மக்கள் ஒத்துழைப்புடன் மத்திய அரசை வலியுறுத்துவோம். நடிகர் விஜய் கட்சியின் கோட்பாடுகள் குறித்து அவர் தான் தெளிவுபடுத்த வேண்டும். முதல்வர் ஸ்டாலின் தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லாதது குறித்து அவரிடம் கேளுங்கள்.முதல்வர் ஸ்டாலின் சிறுபான்மை மக்களின் பாதுகாவலர் என்ற போர்வையில் ஓட்டுக்காக மதங்களை பிளவுபடுத்தி பலன் பெற முயற்சி செய்கின்றார். தமிழகத்தில் 2026 சட்டசபை தேர்தலில் பழனிசாமி ஆட்சியை பிடிக்க முடியாது. அவர் பகல் கனவு காண்கிறார். அத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிடுவோம். கூட்டணி மந்திரி சபை அமைப்போம் என்றார்.