உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பா.ஜ.,வின் ஒரிஜினல் வாய்ஸாக பழனிசாமி மாறிவிட்டார்: ஸ்டாலின்

பா.ஜ.,வின் ஒரிஜினல் வாய்ஸாக பழனிசாமி மாறிவிட்டார்: ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவாரூர்: ''எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, பா.ஜ.,வின் ஒரிஜினல் வாய்ஸாக மாறி விட்டார்,'' என, முதல்வர் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.திருவாரூரில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறேன்; தமிழகத்தின் வரலாற்றில் எந்த அரசும், இவ்வளவு திட்டங்களை செய்திருக்காது. நிதி நெருக்கடிக்கு மத்தியில், ஒன்றிய அரசையும் சமாளித்து சாதனைகளை செய்திருக்கிறோம்; தொடர்ந்து செய்யத்தான் போகிறோம். இதை பார்த்து, தாங்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, 'தமிழகத்தை மீட்போம்' என, ஒரு பயணத்தை துவக்கியுள்ளார்.தமிழ்நாடு என சொல்லக்கூடாது என்று சொல்லுகிற கூட்டத்துடன், அ.தி.மு.க.,வை சேர்த்துவிட்டார். அ.தி.மு.க.,வை மீட்க முடியாதவர், தமிழகத்தை மீட்கப் போகிறாராம். கூவத்துாரில் ஏலம் எடுத்து, கரப்ஷன், கலெக் ஷன், கமிஷன் என தமிழகமே பார்க்காத அவல ஆட்சி நடத்தியவர் பழனிசாமி. பழனிசாமிக்கு தெரிந்தது எல்லாம், துரோகம் செய்வது மட்டும் தான். உங்களை கொண்டு வந்தவருக்கு துரோகம் செய்து, வெளியில் அனுப்பினீர்கள். கட்சிக்கும், தொண்டர்களுக்கும் துரோகம் செய்து கூட்டணி வைத்தீர்கள். ஆட்சியில் இருந்தபோது தமிழகத்தை அடகு வைத்து, மக்களுக்கு துரோகம் செய்தீர்கள். இப்போது, தமிழகத்தின் உரிமைகளை பறித்தவர்களுடன் கூட்டணி வைத்துள்ளனர்.ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் பள்ளி, கல்லுாரி கட்டக்கூடாது என்கிறார்; இதற்கு முன், பா.ஜ.,வுக்கு டப்பிங் வாய்ஸ் கொடுத்து கொண்டிருந்த பழனிசாமி, தற்போது பா.ஜ.,வின் ஒரிஜினல் வாய்ஸாக பேச ஆரம்பித்து விட்டார். அறநிலையத்துறை சட்டத்தில் கல்லுாரி துவங்க அனுமதி இருக்கிறது. இது தெரியாமல் எப்படி முதல்வராக இருந்தார் என தெரியவில்லை. எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபோது, பழனி ஆண்டவர் தொழில்நுட்ப கல்லுாரி திறந்திருக்கிறார். அந்த கல்லுாரிக்கு, கூடுதல் கட்டடத்தை திறந்ததே பழனிசாமிதான். நாங்கள் கல்லுாரி துவங்கினால் தவறு என்கிறார். பா.ஜ.,வினர் கூட இப்படி சொல்வதில்லை. என்ன பயணம் போனாலும், இறுதியில் இலக்கை அடைய மாட்டார் பழனிசாமி. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Mani . V
ஜூலை 13, 2025 07:13

கோபாலாபுரத்தின் வாழ்நாள் கொத்தடிமைகள் திருமா வைகோ முத்தரசன், போன்றோர் உங்களின் டூப்ளிகேட் வாய்ஸ்சாக மாறிவிட்ட பொழுது பா.ஜ.,வின் ஒரிஜினல் வாய்ஸாக பழனிசாமி மாறுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை? திராணி இருந்தால் தனித்து போட்டி என்று சொல்லி விட்டு, ஓட்டுக்கு காசு கொடுக்காமல் தேர்தலை சந்திக்க முடியுமா?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 11, 2025 07:46

அப்பா எனக்கு ஒரு டவுட்டு, 2026 தேர்தல்ல திமுகவுக்கு 200க்கும் அதிகமான தொகுதிகள்ல வெற்றி கிடைக்கிறது உறுதியாயிடுச்சு. இதுவரைக்கும் முணுமுணுத்த ஜாக்கட்டோ ஜையோ தமிழ் சங்கம் இப்போ மௌனம் ஆயிடுச்சு. இப்போ உங்க கவனமே அந்த 34 தொகுதியை ஜெயிக்கறதுதான். அதுமட்டுமில்லாம 2031,2036,2041 வரைக்கும் திமுகதான் ஆட்சிக்கட்டில்ல படுத்திருக்கப்போவது. இன்பநிதி ஏற்கனவே முதலமைச்சர் ஆகாரத்துக்கு ட்ரெயினிங்ல சேர்ந்துட்டாரு. அதனால பழனிசாமி பாஜக ஆனா என்ன பாஜக பழனிசாமி ஆனா என்ன, நீங்க உங்க பாட்டுக்கு திருபுவனம் ஸ்டைல்ல எல்லாரையும் அடிச்சு காலி பண்ணிட்டு போய்க்கிட்டே இருங்க.


பேசும் தமிழன்
ஜூலை 11, 2025 07:41

எப்படி..... நீங்கள் ராஜபக்சே வாய்ஸாக மாறியது போலவா ??


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 11, 2025 08:35

தினம்தோறும் துண்டு சீட்டில் தெலுங்கில் எழுதி கொடுத்தை தமிழில் படிப்பார் ..


Kjp
ஜூலை 11, 2025 07:39

உங்க அப்பா நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக. மத்தியில் சுயாட்சி மாநிலத்தில் கூட்டாட்சி என்று தமிழகத்தின் முதல்வராக என்னை ஆக்கி விடுங்கள் என்று இந்திரா காந்தியிடம் காலில் விழாத குறையாக பதவி கேட்டதெல்லாம் உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா. பாஜக தீண்டத்தகாத கட்சியல்ல என்று பதவி சுகத்தை அனுபவிக்க சொல்ல வில்லையா. கூடா நட்பு கேடாய் முடியும் என்று காங்கிரஸை கழட்டினார். சக்கர நாற்காலியில் டெல்லி சென்று மத்திய அரசில் பதவிகளை பெற்றவர் யார். நீங்கள் பழனிச்சாமியை விமர்சனம் செய்கிறீர்கள். காலக் கொடுமை.


Vijay
ஜூலை 11, 2025 07:05

ஸ்டாலின் குடும்பம் வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 11, 2025 07:04

நீங்கள் காங்கிரசில் டுப்ளிக்ட் வாய்ஸாக மாறிவிட்டிர்கள் .. உங்கள் அப்பா அண்ணபூரணி தாயே என்று சோனியா காந்தியை அழைத்ததாக கேள்வி ....


S Nagarajan
ஜூலை 11, 2025 07:02

அவரவர் தங்களை தேர்ந்தெடுத்த மக்களுக்கு என்ன நல்லது செய்ய வேண்டும் என்பதைப் பற்றி சிந்திக்காமல், ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு, அடுத்தவர் எப்படி கூட்டணி அமைக்கிறார்கள் என்பதைப் பற்றி ஏன் கவலைப்படுகின்றனர்?


Naga Subramanian
ஜூலை 11, 2025 06:51

ஏற்கவனவே தொல்லு கம்மு முஸ்சு என அனைவரும் இந்த மஹாராஜா குடும்பத்துக்கான குரலாக இருக்கிறார்கள். பாஜகவும் அது போல மாறினால் எவ்வளவு மகிழ்ச்சியடைவார் தெரியுமா


Chandru
ஜூலை 11, 2025 06:45

அது சரி. இந்த ஆள் ஏன் இப்படி கூவுகிறார் ??


vivek
ஜூலை 11, 2025 06:12

தமிழக மக்களும் ஒரிஜினல் பிஜேபி யாக மாறிவிட்டார்கள் தலைவா


முக்கிய வீடியோ