வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நீங்க எல்லாம் கருத்து சொல்லும் அளவுக்கு நாட்டின் நிலைமை மோசமாகி விட்டது...உங்கள் சுயநலத்துக்காக, விடியலுக்கு முட்டு கொடுப்பது போல, மக்களுக்கு நீங்கள் செய்யும் பச்சை துரோகம் ஏதுமில்லை.
தமிழகத்தில், பா.ஜ., வேரூன்ற கூடாது என்பதற்காக, லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வை ஆதரித்தேன். நல்லாட்சி வழங்கி வரும் ஸ்டாலின் ஆட்சி தொடர, வரும் சட்டசபை தேர்தலில் பணியாற்றுவேன். என் கடந்த கால செயல்பாடுகளை உற்று நோக்கும் முதல்வர், நிச்சயமாக வரும் சட்டசபை தேர்தலில், அங்கீகாரத்தை வழங்குவார் என நம்புகிறேன். ஏற்கனவே, அ.தி.மு.க.,வில் ஒரு 'சீட்' வாங்கி வெற்றி பெற்றேன். அ.தி.மு.க., என்னை போன்றவர்களுக்கு அடையாளம் தந்த கட்சி. இன்று அந்த கட்சி கூட்டத்தில், அவர்கள் கட்சி கொடியை பிடிக்காமல், வேறு கட்சி கொடியை பிடித்து ஆட்டும் அவல நிலையை பார்க்கிறோம். இதற்கு அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தான் காரணம். தன் சுயநலத்திற்காக, அ.தி.மு.க.,வை அடகு வைக்க துணிந்தவர். - - கருணாஸ் தலைவர், முக்குலத்தோர் புலிப்படை
நீங்க எல்லாம் கருத்து சொல்லும் அளவுக்கு நாட்டின் நிலைமை மோசமாகி விட்டது...உங்கள் சுயநலத்துக்காக, விடியலுக்கு முட்டு கொடுப்பது போல, மக்களுக்கு நீங்கள் செய்யும் பச்சை துரோகம் ஏதுமில்லை.