உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவையில் மோடியை சந்தித்தார் பழனிசாமி!

கோவையில் மோடியை சந்தித்தார் பழனிசாமி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவை வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி சந்தித்தார். கோவை கொடிசியா அரங்கில் நடந்த இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தந்தார். கோவை வந்த மோடியை, விமான நிலையத்தில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர் வேலுமணி, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், த.மா.கா., தலைவர் வாசன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=nb825301&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சமீபத்தில் நடந்த பீஹார் சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி அபார வெற்றி பெற்றது.அதைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, 'பீஹார் வெற்றியால் தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு​வங்கம், அசாம் பா.ஜ., தொண்டர்களுக்கு புது சக்தி கிடைத்துள்ளது.பா.ஜ., தொண்டர்களால் முடியாதது என்று எதுவுமே இல்லை; அவர்கள் மனது வைத்தால் எதையும் சாதிப்பர்' என்றார்.பீஹாரை தொடர்ந்து தமிழகம், மேற்கு வங்கத்தில், பா.ஜ., தலைமை கவனம் செலுத்த துவங்கியுள்ளது. பிற்படுத்தப்பட்ட, பட்டியலின மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள கட்சிகளை ஒருங்கிணைத்து, கூட்டணி வைத்ததால், பீஹாரில் வெற்றி கிடைத்துள்ளது.எனவே, இதே மாடலில், தமிழகத்திலும் கூட்டணி அமைக்க, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.திருமாவளவனின் வி.சி., தவிர, டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோர் நடத்தும் கட்சிகள் என, பட்டியலின கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டு வர, பா.ஜ., திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இன்று கோவை வந்த பிரதமர் மோடியை, தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் பழனிசாமி சந்தித்து பேசினார். கோவை சந்திப்புக்குப் பின், தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கும் என்று, அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

S.L.Narasimman
நவ 19, 2025 20:21

பிரதமராவது இங்கு விவசாயம் மற்றும் விவசாயிகள் முன்னேற்றம் சம்பந்தமான பயனுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அதே சிந்தனை கொண்ட எடப்பாடியார் மோடி அவர்களை சந்திக்கின்றார்.


Barakat Ali
நவ 19, 2025 18:27

மரியாதை நிமித்தமாகவும் திராவிட நாட்டின் முதல்வர் சந்திக்கலை ...... விவசாயம் மாநில அரசின் பட்டியலில் ... இருந்தாலும் முதல்வர் கலந்துக்கலை ......


Priyan Vadanad
நவ 19, 2025 17:06

இவர் பிரதமரோடு அரசியல் பேசவில்லை. அதிமுகவும் அதன் கிளை கழகங்களும் பாஜக முகம் கொண்டிருப்பதால் நாங்கள் தேர்தலுக்குமுன் ஒன்றாக இணைவோம். பன்னீரும், தினகரனும் என்னுடைய உடன்பிறப்புக்களே.


M Ramachandran
நவ 19, 2025 16:28

Gokul கிருஷ்ணன் உங்க ஐடியா எல்லாம் ஜு ஜுபி . அவர் வேற லெவல்.


M Ramachandran
நவ 19, 2025 15:47

பழனியின் கோரிக்கையை யேற்று தானே அண்ணாமலையை மாற்றினார்கள். இன்னும் என்ன வேண்டுதல். வானதி தலமைக்கு வரகூடாது என்ற பயமா?


முருகன்
நவ 19, 2025 15:40

பிரதமரை பார்த்த உடன் என்ன ஒரு பணிவு


Murthy
நவ 19, 2025 14:51

டெல்லியிலிருந்து வந்து கோவையில் EPS ஐ சந்திக்கும் மோடி ......


mohana sundaram
நவ 19, 2025 11:15

பொதுச்செயலாளராக இருக்கும் வரை அந்த கட்சி கரையேறுவது கடினம்.


Gokul Krishnan
நவ 19, 2025 09:54

அப்படியே நிதிஷ் குமார் ஸ்டைலில் வரும் தமிழக சட்டசபை தேர்தலில் தமிழ் நாட்டு மகளிருக்கு ரூபாய் பத்தாயிரம் வங்கியில் டெபாசிட் பண்ணா சொல்லுங்க 234 தொகுதியில் 232 ஜெயிக்கலாம்


vivek
நவ 19, 2025 10:36

உழைத்து பிழையப்பா...எல்லாமே ஓசியில் வேணுமோ..


Priyan Vadanad
நவ 19, 2025 16:58

உழைத்து பிழையப்பா என்கிற இரு வார்த்தைகளில் பிழையப்பா என்கிற வார்த்தை கருத்துப்பிழை தருவதாக அமைகிறது. பிழையப்பா என்கிற வார்த்தை தவறப்பா என்கிற பொருள் தருகிறது. மொத்தத்தில் இந்த இரு வார்த்தைகளும் சேர்ந்து வரும்போது உழைத்து தவறப்பா என்ற பொருள் தரும். உழைத்து பிழைத்துக்கொள்ளப்பா என்று இருக்கவேண்டும்.


Gokul Krishnan
நவ 19, 2025 17:12

அட விவேக் இதை பீகார் மாநில தேர்தல் நடக்கும் முன் சொல்ல வேண்டியது தானே. ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே மொழி என்று வலியுறுத்தி வரும் மத்திய அரசு அது போல் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரி ரூபாய் பத்தாயிரம் பெண்கள் தொழில் செய்ய பணம் தரலாமே


முருகன்
நவ 19, 2025 19:35

பீகாரில் கொடுத்த போது எங்கே இருந்தாய்


vivek
நவ 19, 2025 20:15

ஆயிரம் ரூபாய் போதும்


vivek
நவ 19, 2025 20:16

அப்போ தமிழகம் முன்னேறிய மாநிலம் இல்லையா....


அப்பாவி
நவ 19, 2025 07:51

நிறைய காலில் விழுந்த அனுபவம் கைகொடுக்கும்.


Field Marshal
நவ 19, 2025 09:51

பெரியவர்கள் மற்றும் ஞானிகளின் காலை தொட்டு வணங்குவது நமது கலாச்சாரம்


vivek
நவ 19, 2025 10:37

பாவம் ...


Raman
நவ 19, 2025 10:46

Adimai pulambhal


vivek
நவ 19, 2025 15:37

அப்புசாமி பேச தகுதி இல்லை


Haja Kuthubdeen
நவ 19, 2025 16:01

வயிறு எரியுதா!!!!


முக்கிய வீடியோ