உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., தொடர்ந்த வழக்கில் பழனிசாமி பதிலளிக்க உத்தரவு

தி.மு.க., தொடர்ந்த வழக்கில் பழனிசாமி பதிலளிக்க உத்தரவு

சென்னை:போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதானவரை, தி.மு.க.,வுடன் தொடர்புபடுத்தி பேசியதை எதிர்த்த வழக்கில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு எதிராக, தி.மு.க., சார்பில், அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனு:தி.மு.க., அரசு பதவியேற்ற நாளில் இருந்து, சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதோடு, போதைப் பொருட்களின் தலைநகரமாக தமிழகம் மாறுவதாகவும், போதைப்பொருள் மாபியா நடத்தி வந்த ஜாபர் சாதிக்கை பிடிக்காமல் விட்டதோடு, தி.மு.க.,வில் அங்கீகாரம் அளித்ததாகவும், 'எக்ஸ்' வலைதளத்தில் பழனிசாமி கூறியிருந்தார்.இந்த அவதுாறான பதிவால், பொது மக்களின் பார்வையில், எங்கள் கட்சிக்கு அவமரியாதை ஏற்படுத்த, பழனிசாமி முயற்சிக்கிறார். ஜாபர் சாதிக்கின் நடவடிக்கையில், அரசியல் கட்சி என்ற முறையில் தி.மு.க.,வுக்கு எந்த தொடர்பும் இல்லை. ஜாபர் சாதிக் கைது செய்யப்படுவதற்கு முன், பிப்ரவரி 25ல், கட்சி பதவியில் இருந்து நீக்கப்பட்டு விட்டார்.உள்நோக்கத்துடன், கட்சியை அவதுாறு செய்யும் விதத்தில், இத்தகைய பதிவை பழனிசாமி வெளியிட்டுள்ளார். கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக, வேண்டுமென்றே இவ்வாறு கூறியுள்ளார். எனவே, இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க, பழனிசாமிக்கு உத்தரவிட வேண்டும். ஜாபர் சாதிக்கையும், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களையும், தி.மு.க.,வோடு தொடர்புபடுத்தி பேச, பழனிசாமிக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனு, நீதிபதி ஜெயச்சந்திரன் முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் மனுராஜ் ஆஜரானார். பழனிசாமி தரப்பில், மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்க பழனிசாமிக்கு உத்தரவிட்டு, விசாரணையை, டிசம்பர் 3க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை