உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓ.பி.எஸ்.,ஸை கட்சியில் சேர்க்க பழனிசாமி தயார்! பா.ஜ., அழுத்தத்தால் மனமாற்றம்

ஓ.பி.எஸ்.,ஸை கட்சியில் சேர்க்க பழனிசாமி தயார்! பா.ஜ., அழுத்தத்தால் மனமாற்றம்

எதையும் எதிர்பார்க்காமல், தனது தலைமையை ஏற்பதாக அறிவித்தால், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தை அ.தி.மு.க.,வில் சேர்க்க தயாராக இருப்பதாக, அக்கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி உறுதி அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சியின் தென் மாவட்ட நிர்வாகிகளும், பா.ஜ., தலைமையும் கொடுத்த அழுத்தம் காரணமாகவே, பழனிசாமியின் நிலைப்பாட்டில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அ.தி.மு.க., பொதுக்குழுவில், கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரமும் பழனிசாமிக்கு வழங்கப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7ghbrd2d&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சந்திப்பு

பொதுக்குழுவில் பேசிய பழனிசாமி, 'தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன், வலுவான கூட்டணி அமைப்போம்' என அறிவித்தார். இந்நிலையில், பழனிசாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார்.அப்போது, பா.ஜ., மாநில துணைத் தலைவர்கள் சக்கரவர்த்தி, ஜெயப்பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பு, மரியாதை நிமித்தமான சந்திப்பு என, நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

முக்கியத்துவம்

வரும் 14ம் தேதி டில்லி செல்லும் அவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, அமைப்பு பொதுச்செயலர் சந்தோஷ் உள்ளிட்டோரை சந்திக்கிறார். அதற்கு முன்பாக பழனிசாமியை சந்தித்துஇருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அமித் ஷா சொல்லியே இந்த சந்திப்பு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்தச் சந்திப்பின்போது, கூட்டணியில் எந்தெந்த கட்சிகளை சேர்ப்பது என்பது குறித்தும், டில்லியில் அமித் ஷாவிடம் பன்னீர்செல் வம் வைத்த கோரிக்கைகள் குறித்தும் விவாதித்துள்ளனர். சந்திப்பின்போது, மாவட்டத்துக்கு இரண்டு என்ற வகையில், பா.ஜ., போட்டியிட விரும்பும் 76 சட்டசபை தொகுதிகளுக்கான பட்டியலையும், நயினார் நாகேந்திரன் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, பா.ஜ., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: த.வெ.க., கணிசமான ஓட்டுகளை பிரிக்கும் என்பதால், வரும் சட்டசபை தேர்தல் சவாலானதாக மாறியுள்ளது. பன்னீர்செல்வமும், தினகரனும் தனித்தோ, வேறு கூட்டணியில் இணைந்தோ போட்டியிட்டால், முக்குலத்தோர் சமுதாய ஓட்டுகள் பிரிந்து, தி.மு.க., கூட்டணிக்கு சாதகமாகி விடும். தென் மாவட்டங்களில் வெற்றி பெற வேண்டுமானால், பன்னீர்செல்வமும், தினகரனும் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு அவசியம் என, அம்மாவட்டங்களில் உள்ள அ.தி.மு.க., நிர்வாகிகள் விரும்புகின்றனர். கள நிலவரம் குறித்து எடுக்கப்பட்ட பல்வேறு சர்வே முடிவுகளும் அதையே தெரிவிக்கின்றன. மத்திய அமைச்சர் அமித் ஷாவும் அதையே வலியுறுத்துகிறார். அவரது விருப்பத்தை தான், பழனிசாமியிடம் நயினார் நாகேந்திரன் எடுத்துக் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த பழனிசாமி, 'அ.தி.மு.க.,வுக்கு துரோகம் செய்து விட்டு, தினகரன் தனிக்கட்சி நடத்தி வருகிறார். என்னை முதல்வர் வேட்பாளராக ஏற்க மாட்டேன். அ.தி.மு.க.,வை தோற்கடிப்பதே தன் லட்சியம் என பேசி வருகிறார். எனவே, அவரை அ.தி.மு.க.,வில் அல்லது கூட்டணியில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை' என, திட்டவட்டமாக கூறியுள்ளார். 'தி.மு.க., எதிர்ப்புதான் அ.தி.மு.க.,வின் அரசியல். ஆனால், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க., தான் வெற்றி பெறும் என்கிறார் பன்னீர்செல்வம். முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார். இப்படி தி.மு.க.,வுடன் இணக்கமாக இருப்பவரை, அ.தி.மு.க.,வினர் ஏற்க மாட்டார்கள். அவரை சேர்த்தால் என்னையும் ஏற்க மாட்டார்கள். எதையும் எதிர்பார்க்காமல், 'பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்கிறேன்' என பகிரங்கமாக அறிவித்தால், பன்னீர்செல்வத்தை கட்சியில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்கலாம்' என, நயினார் நாகேந்திரனிடம் பழனிசாமி கூறியிருக்கிறார். 'தேசிய அளவில் பா.ஜ., பெரிய கட்சியாக இருக்கலாம். தமிழகத்தைப் பொறுத்தவரை நடக்கவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்டிருக்கும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் அ.தி.மு.க.,தான், எந்த கட்சியை கூட்டணியில் சேர்ப்பது என முடிவு செய்யும்' என்றும், பழனிசாமி உறுதியாக கூறி விட்டார்.இவ்வாறு அவர் கூறினார். தினகரனை சேர்க்க முடியாது என கூறிவிட்ட பழனிசாமி, பன்னீர்செல்வத்தை சேர்க்க நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படும் நிலையில், அ.தி.முக., - பா.ஜ., கூட்டணியை விரிவுபடுத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. டில்லியில் அமித் ஷாவை சந்தித்த பின், நயினார் நாகேந்திரன் மீண்டும் பழனிசாமியை சந்தித்து, இதுதொடர்பாக பேசுவார் என்கிறது, தமிழக பா.ஜ., வட்டாரம். - -நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 43 )

சிட்டுக்குருவி
டிச 13, 2025 00:27

2011 இல் என்ன நடந்ததோ அது மறுபடியும் நடக்கபோகுது .அதனால் பாஸ்சேன்ஜ்ர் ட்ரெயின் மெதுவாக நகரும்போதே ஏறிவிடுங்கள் .இல்லையென்றால் தவற விட்டுவீர்கள் .வருத்தப்படுவீர்கள் .நீங்கள் எதிர்பார்த்தபடி TVK நகரவில்லை .TVK வும் இதே ட்ரைனை இப்போதே பிடித்துவிட்டால் தப்பலாம் .இல்லையென்றால் இன்னுமொரு நாயகன்தான் .


சிட்டுக்குருவி
டிச 12, 2025 23:48

ஜெயலலிதாவுக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானங்கள் கஷ்டங்கள் அகால மரணம் எல்லாவற்றிற்கும் காரணம் தோழியும் அவரைசார்ந்தவர்களும் என்பதுதான் உலகறிந்த விஷயம் .அவர்களை விடுவதில் என்ன சிரமம். பன்னீர்செல்வத்துக்கு அவர்களைவிட்டால் ஒருவேளை 2 அல்லது 3 லட்சம் வாக்குகள் குறையலாம் அல்லது குறையாமல்கூட போகலாம் .அவர்களுக்கெல்லாம் மறுவாழ்வுகொடுக்காதீர்கள் .பன்னீர்செல்வமும் அவருடைய சகாக்களும் சேருவது தமிழகத்தை அழிவிலிருந்து காப்பாற்றுவதற்கு உதவி புரிவதாகும் ..இல்லையென்றால் நீங்களும் தமிழக மக்களுக்கு எதிராக DMK வுக்கு துணைபுரிவதாகும் .இதில் உங்களுக்கு எந்தவிதமான பின்னடைவும் கிடையாது .இந்திராகாந்தி மீது கல்லெறிந்தவர்கள் இந்திராவுடன் எப்படி சேர்ந்தார்கள் என்பதை நினைவு கூறுங்கள் .


Muthu Kumar
டிச 12, 2025 22:07

தற்சமயம் ஓபிஎஸ் சேராமல் இருப்பதே அவருக்கு நல்லது. தேர்தல் முடிந்த பிறகு அதிமுக வில் சேரலாம். ஏன் எனில் வரும் தேர்தலில் தோல்வி அடைந்தால் ஈபிஎஸ் தப்பித்து கொள்வார். இதை கண்டிப்பாக ஓபிஎஸ் செய்தால் அவருக்கு நல்லது. இல்லை என்றால் அவருக்கு இருக்கும் மரியாதை குறைந்து விடும். ஈபிஎஸ் அகங்காரம் ஒரு முடிவுக்கு வரும்.


பேசும் தமிழன்
டிச 12, 2025 21:12

எடப்பாடி அவர்கள் கொஞ்சம் விட்டு கொடுத்து போவது நல்லது.... தமிழக மக்களின் ஒரே எண்ணம் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும்.... ஜெயலலிதா அவர்கள் அனைவரையும் அரவணைத்து செல்வார்....மதுரை தீப்பொறி ஆறுமுகம்..... நாஞ்சில் சம்பத் போன்ற ஆட்கள் ஜெயலலிதா அவர்களை பற்றி பேசாத பேச்சா.... ஆனாலும் சிறு துரும்பும் பல் குத்த உதவும் என்று..... அவர்களையும் கட்சியில் சேர்த்து அரவணைத்து சென்றார்.... அப்படி இருந்தால் தான் வெற்றி கிடைக்கும்.... இல்லையேல் மறுபடியும் திமுக ஆட்சிக்கு வர நீங்களே காரணமாக இருந்து விடாதீர்கள் !!!


Easwar Kamal
டிச 12, 2025 20:38

பன்னீர் செல்வம் சேர்த்து கொண்டால் கண்டிப்பாக அதிமுக வலு சேர்க்கும். விஜய் போன்ற கட்சியோடு ஒட்டாமல் எடப்படியோடு பயணித்தால் கண்டிப்பாக dmk பெரிய அளவில் அடி விழும்


Suresh
டிச 12, 2025 20:00

காலம் தாழ்ந்தாவது நல்ல முடிவை எடப்பாடி எடுத்தால் சரி. அதேபோல உள்ளே வரும் பன்னிர்செல்வமும் அடக்கிவாசிக்கவேண்டும்.


Kovandakurichy Govindaraj
டிச 12, 2025 17:58

டிடிவீ தினகரன் இல்லாமல் அதிமுக - பிஜேபி கூட்டணி வெற்றி பெற முடியாது . இது ஈபிஎஸ்க்கு தெரியுதோ இல்லையோ அமிதாஷாவுக்கு நன்றாகவே தெரிகிறது . அதனால் தான் டிடிவீ தினகரனை கூட்டணிக்கு வற்புறுத்துகிறார்கள்


Iniyan
டிச 12, 2025 15:53

அண்ணாமலை தலைமையில் பாஜக தனித்து போட்டி இட்டால் பிரதான எதிர் கட்சியாக பாஜக வர வாய்ப்புண்டு.


chandran
டிச 12, 2025 16:42

வாழ்த்துக்கள்.. :-


ராஜேஷ்
டிச 12, 2025 15:50

M G R , J கட்சிக்கு இரட்டை இலை என்ற உயிர் உண்டு. ஒன்றுபடுங்கள் வெற்றி பெறுங்கள்.


duruvasar
டிச 12, 2025 15:11

"அமித் ஷா சொல்லியே இந்த சந்திப்பு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது" ஆசிரியரே உங்கள் நிருபரின் இந்த டெம்ப்ளட்டை முதலில் நிறுத்த சொல்லுங்கள். அதிமுக பிஜேபி பற்றிய செய்தி வந்தால் இந்த டேம்ப்லட் பை டீபால்ட்டாக வருகிறது.


முக்கிய வீடியோ