நலம் விசாரித்த பழனிசாமி, சீமான்
இதய பிரச்னைக்காக, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பா.ம.க., நிறுவனர் ராமதாசை, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று மாலை சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை பற்றியும் கேட்டறிந்தார். இதுபோல, மருத்துவமனைக்கு சென்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அங்கு சிகிச்சை பெறும் ராமதாஸ் மற்றும் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ இருவரையும் சந்தித்து நலம் விசாரித்தார்.