உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எங்கள் பேரணிக்கு பழனிசாமி வர வேண்டும்

எங்கள் பேரணிக்கு பழனிசாமி வர வேண்டும்

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பிரசார பயணத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை காணவில்லை; முகவரியை தேடிக் கொண்டிருக்கிறது என பேசியுள்ளார். பழனிசாமி வசிக்கும் சேலத்தில், வரும் 18ல் இ.கம்யூ., பேரணி நடக்க உள்ளது. தன் சுற்றுப்பயணத்தை அன்றைய தினம் ஒத்தி வைத்துவிட்டு, எங்கள் பேரணியை பார்க்க அவர் வரவேண்டும். அதன் பிறகாவது எங்கள் கட்சி எப்படிப்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பழனிசாமியை அமித் ஷா வளைத்து பிடித்திருந்தாலும் , பா.ஜ.,வால் தமிழகத்தில் ஒருபோதும் காலுான்ற முடியாது. - முத்தரசன் மாநில செயலர், இந்திய கம்யூ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

வீச்சு பரோட்டா பக்கிரி
ஆக 04, 2025 10:25

தகர உண்டியல் குலுக்கிகளுக்கு அதற்குள் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு விட்டதா... இனிமேல் பேரணி ..சீரணி ..எல்லாம் ஜாம் ஜாம் என்று நடக்கும் ..மார்க்சின் வாரிசுகள் கொடுத்தர்க்கு மேல் கூவி தள்ளிவிடுவார்கள் ..இங்கு கதறும் கதறல் ரஷ்யா வரை கேட்கும் ....


veeramani
ஆக 04, 2025 09:57

முத்தரசன் அவர்களே நீங்கள் கனவு உலகத்திலிருந்து மீண்டு வாருங்கள் கம்யூனிஸ்ட் எல்லாம் தொண்டு வயதானவர்களின் கட்சி. இளைஞர்களை வலைவீசி தேடவேண்டும் உங்களது குரல் இன்னும் ஐந்து வருடங்களே ..பின்னர் மாலை போடவேண்டிய நிலையில் உள்ளீர்கள். ஆ தி மு க பற்றி பேசுவதற்கு ஒரு தகுதி வேண்டாமா???


வீச்சு பரோட்டா பக்கிரி
ஆக 04, 2025 13:59

நான்கு கம்னியூஸ்ட் கட்சியினர் ரோட்டில் பேசிக்கொடு நடந்தால் அதற்கு பெயர் பேரணியா? அநியாயம் .. இப்போதெல்லாம் மைக் செட் காரர்கள் கூட கம்னியூஸ்ட் மீட்டிங்குக்கு வருவதில்லை ..உயிர் பயம் ..


Arul Narayanan
ஆக 04, 2025 09:21

வாங்கிய 25 கோடி இப்படி தான் செலவாகிறது போலும்.


முக்கிய வீடியோ