உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆர்.எஸ்.எஸ்., குரலாக ஒலிக்கிறார் பழனிசாமி

ஆர்.எஸ்.எஸ்., குரலாக ஒலிக்கிறார் பழனிசாமி

அ.தி.மு.க., உருவாகி, 54 ஆண்டுகளாகி விட்டது. இது போன்ற ஜனநாய சக்திகள் நீண்ட காலத்துக்கு அரசியல் இயக்கமாகத் தொடர வேண்டும். ஆனால், எம்.ஜி.ஆர்., துவங்கிய இந்த இயக்கம், அவர் மற்றும் ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்டது. அவர்கள் காலத்தில் இருந்தது போன்ற இயக்கமாக தற்போது அ.தி.மு.க., இல்லாதது கொஞ்சம் வருத்தத்துக்குரியதுதான். தற்போதைய அ.தி.மு.க,.வின் பொதுச்செயலர் பழனிசாமிக்கு, கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மீது அப்படி என்ன வருத்தம், கோபம் என தெரியவில்லை; மிகக் கடுமையாக விமர்சிக்கிறார். அரசியலில் யாரும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. அ.தி.மு.க., பழனிசாமி , ஆர்.எஸ்.எஸ்., குரலாக மாறிப் போய் இருப்பது வருத்தத்துக்குரியது. இது தமிழகத்துக்கே ஆபத்தானது. தமிழக சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை, கவர்னர் ரவி திருப்பி அனுப்புவது ஏற்புடையது அல்ல. அவர் சட்டசபையின் மாண்புகளை மதித்து நடக்க வேண்டும். - வீரபாண்டியன், மாநில செயலர், இந்திய கம்யூ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை