உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தாயுமானவர் திட்டம் வெற்று விளம்பரம்: இபிஎஸ் கடும் குற்றச்சாட்டு

தாயுமானவர் திட்டம் வெற்று விளம்பரம்: இபிஎஸ் கடும் குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தாயுமானவர் திட்டம், வெற்று விளம்பரம்' என, அ.தி.மு.க. பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கை: தி.மு.க. அரசு, கடந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி சமர்பித்த பட்ஜெட்டில், 'தாயுமானவர்' என்ற புதிய திட்டத்தை அறிவித்தது. வேலை வாய்ப்பு அதன்படி, 'ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியோர், மாற்றுத் திறனாளிகள், சிறப்பு குறைபாடுடைய குழந்தைகள் உள்ள குடும்பங்கள் என, சமூகத்தின் விளிம்பு நிலையில் வாழும் மக்கள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பு, திறன் மேம்பாடு, வீடுகள் போன்ற, அனைத்து உதவிகளும் வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. பட்ஜெட்டில் அறிவித்த திட்டத்தை செயல்படுத்தாமல், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, வீடுகளுக்கே சென்று, ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு, 'தாயுமானவர்' என, முதல்வர் ஸ்டாலின் பெயர் சூட்டியுள்ளார். சொல்வது ஒன்று; செய்வது ஒன்று. இதுதான் தி.மு.க. அரசு. புதிய பெயர் ஏற்கனவே, அ.தி.மு.க. ஆட்சியில், பொது மக்களுக்கு, ரேஷன் பொருட்கள், அவர்கள் வசிக்கும் பகுதிகளுக்கே, நேரடியாக எடுத்து சென்று வழங்கும் திட்டம் செயல் படுத்தப்பட்டது. அதை 'காப்பி பேஸ்ட்' செய்து, தனது பெயரை அல்லது புது பெயரை சூட்டி, அரசு பணத்தில், பல கோடி ரூபாய் செலவில், வெற்று விளம்பரம் செய்துள்ளனர். கடந்த 51 மாதங்களாக, எந்த புதிய திட்டத்தையும் உருவாக்காத தி.மு.க. அரசு, தேர்தல் நெருங்கியதும், தொடர்ந்து அ.தி.மு.க.வின் திட்டங்களுக்கு, புதிய பெயர் வைத்து விளம்பரப்படுத்துகிறது. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவித்த, தாயுமானவர் திட்டம் வேறா; தற்போது துவக்கப்பட்டுள்ள ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் வேறா. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Tamilan
ஆக 16, 2025 13:44

இப்படி தெருத்தெருவாக சென்று மத்திய மதவாத கும்பலுக்கு காவடி தூக்கி இந்துமத மூடத்தனங்களுக்கு விளம்பரம் கொடுக்கும் இவருக்கு இதெல்லாம் தேவையா ?

mathavan
ஆக 16, 2025 11:21

இந்த அடிமைக்கு வேற வேலையில்லை, சாதிகட்சிமாதிரி நடத்துற, செல்லூர் ராஜே, தம்பிதுரை, எல்லாத்தையும் நீ நடத்தும் விதம் தெரியுது, சாதிக்கட்சிநடத்தகூட உனக்கு யூகியதை இல்லை,

ரங்ஸ்
ஆக 16, 2025 10:12

அப்பா எடுபடவில்லை என்று தாயுமாயிட்டார். மக்கள் ஓட்டம்.

Durai
ஆக 16, 2025 06:44

I received phone call from my ration shop on 14th morning that the ration items will be delivered at my residence. But on the same evening I received the call from the same shop to collect the ration items from the shop before 5.30 PM as the weighing scale is not working. This is the sorry state of working of Dravida Model administration which is only for cheap publicity and photo shoots

Kasimani Baskaran
ஆக 16, 2025 06:43

டாஸ்மாக் மூலம் வரும் லாபம் போக மத்திய அரசு உபரியாக பணம் கொடுத்தால் மட்டுமே - போதுமான அளவு ஊழல் செய்து மீதி இருக்கும் பணத்தில் - திட்டங்களை நிறைவேற்ற முடியும். ஆகவே இப்படித்தான் சொதப்ப முடியும். வேறு வழியில்லை.

NARAYANAN
ஆக 16, 2025 06:11

உலகமே வியந்து போற்றும் ஒரு திட்டத்தை [ முதல்வர் கூறியது] மனசாட்சியே இல்லாமல் குறை கூறுகிறீர்களே.திட்டத்தின் பெயரை அப்பாவுமானவர் என்று கூறியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்.ஏமாறும் மக்கள் - ஏமாற்றும் தலைவர்கள்.தமிழ் நாட்டின் தலை எழுத்து.

A viswanathan
ஆக 16, 2025 05:01

வீடுதேடி மருத்துவம் மாதிரி தான்.

M Ramachandran
ஆக 16, 2025 03:02

அப்போ கூட்டணிக்கு ஜெ ஜெ சொன்னபோது தொண்டார்களை குண்டர்களாக நினைத தீர்களா? ஞ்யாபகம் வர வில்லையா? திறமையை மிக்க தலைவர் தான் ஒரு கட்சிக்கு வேண்டும். பேச்சு ஒன்னு செய்கை ஒண்ணாக இருக்க கூடாது, வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று இருக்கணும். சொந்த விருப்பு வெறுப்பு வேலைக்காகது. மக்கள்நலம் கட்சினலம் பார்ப்பவனாக தான் தலை வனாக நீடிக்க முடியும். பேச்சு வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகா இருக்க வேண்டும். விளக்கெண்ணெய்யை மக்கள் விரும்ப மாட்டார்கள். தீர்வு காண முடிய வில்லையா வேறு மூத்த தலையவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஒதுங்க வேண்டும். கூழுக்கு ஆசை மீசைக்கும் ஆசையா? அரசியலை துரோக அரசியலில் அல்ல நேற்று அரசியலுக்கு வந்த அண்ணாமலையிடம் கற்று கொள்ளுங்கள் துரோகம் நிலையக்காது. அவர் எப்படி மக்களிடம் இப்படி செல்வாக்கு மிக்க வராக மாறினார் என்று.

மோகனசுந்தரம்
ஆக 16, 2025 06:26

இந்த எடப்பாடி குறை சொல்லி ஒரு பிரயோஜனம் இல்லை. எப்பொழுது அண்ணாமலையை வேண்டாம் என்று விலக்கினாரோ அன்றே அவருடைய அழிவு ஆரம்பித்துவிட்டது. அதனுடைய முடிவு 2026 இல் தெரியும்.

M Ramachandran
ஆக 16, 2025 03:02

அப்போ கூட்டணிக்கு ஜெ ஜெ சொன்னபோது தொண்டார்களை குண்டர்களாக நினைத தீர்களா? ஞ்யாபகம் வர வில்லையா? திறமையை மிக்க தலைவர் தான் ஒரு கட்சிக்கு வேண்டும். பேச்சு ஒன்னு செய்கை ஒண்ணாக இருக்க கூடாது, வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு என்று இருக்கணும். சொந்த விருப்பு வெறுப்பு வேலைக்காகது. மக்கள்நலம் கட்சினலம் பார்ப்பவனாக தான் தலை வனாக நீடிக்க முடியும். பேச்சு வெட்டு ஒன்று துண்டு ரெண்டாகா இருக்க வேண்டும். விளக்கெண்ணெய்யை மக்கள் விரும்ப மாட்டார்கள். தீர்வு காண முடிய வில்லையா வேறு மூத்த தலையவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு ஒதுங்க வேண்டும். கூழுக்கு ஆசை மீசைக்கும் ஆசையா? அரசியலை துரோக அரசியலில் அல்ல நேற்று அரசியலுக்கு வந்த அண்ணாமலையிடம் கற்று கொள்ளுங்கள் துரோகம் நிலையக்காது. அவர் எப்படி மக்களிடம் இப்படி செல்வாக்கு மிக்க வராக மாறினார் என்று.

M Ramachandran
ஆக 16, 2025 03:01

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை