உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பழனிசாமி உறவினர் நிறுவனம்: ரூ.700 கோடி வரி ஏய்ப்பு?

பழனிசாமி உறவினர் நிறுவனம்: ரூ.700 கோடி வரி ஏய்ப்பு?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் உறவினர் நடத்தி வரும் நிறுவனங்களில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், 700 கோடி ரூபாய்க்கு வரி ஏய்ப்பு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் உறவினரான இவர், 'என்.ஆர்., குரூப்ஸ், என்.ஆர்., கன்ஸ்ட்ரக் ஷன், ஸ்பேக் ஸ்டார்ச் புராடெக்ட்ஸ்' உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார்.இந்நிறுவனங்கள் வாயிலாக, அரசு மற்றும் தனியார் நிறுவன கட்டுமான பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், பாசனம், மின்சாரம் தயாரிப்பு, கடல் சார்பு துறைகளின் கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.இந்நிலையில், கடந்த 7ம் தேதியில் இருந்து, ஐந்து நாட்களாக சென்னை, ஈரோடு என, மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள, இந்நிறுவனத்திற்கு சொந்தமான 26 இடங்களில், வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஈரோடு, செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பாங்க் நகரில் உள்ள, என்.ஆர்., குரூப்ஸ் தலைமை அலுவலகம், என்.ஆர்., திருமண மண்டபம், நவநாயக்கன்பாளையத்தில் உள்ள ராமலிங்கம் வீடு, அம்மாபேட்டை அருகே, பூனாச்சியில் உள்ள ஸ்பேக் ஸ்டார்ச் புராடெக்ட்ஸ் நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டது.இச்சோதனையில், 10 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 700 கோடி ரூபாய் வரை வரி ஏய்ப்பு நடந்துள்ளது கண்டறியப்பட்டு இருப்பதாக வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்ததாக தகவல் வெளியானது. அவர்களிடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Laddoo
ஜன 13, 2025 11:01

இதென்ன தலைவலி? அமைதிப்படை அமாவாசைக்கு வந்த சோதனை?


Barakat Ali
ஜன 13, 2025 10:54

என்னை, என் குடும்பத்தை தொட்டுப்பாரு ன்னு ஒருத்தன் சவால் விடுகிறான் ..... அவனிடம் போகவே முடியலை .....


திகழ்ஓவியன்
ஜன 13, 2025 10:48

எடப்பாடி இனி ரண களம் ஆகாம இருக்கனும் என்றால் கூட்டணிக்கு கை தூக்கி விடுங்கள்


sankaranarayanan
ஜன 13, 2025 10:41

எடப்பாடிக்கும் ஈரோட்டிற்கும் என்னய்யா சம்பந்தம் இருவரும் உறவினர்களாக இருந்தால் என்ன இருக்கவே கூடாதா ஒருவர் அரசியலில் இருக்கிறார் மற்றொருவர் தொழிலை நடத்துகிறார் சமயம் வரும்போது ஒருவருக்கொருவர் உதவி செய்வது என்பது இயல்பு தானே அந்த முறையில் எடப்பாடி பல பல திட்டங்களை செயல்பட அந்த உறவினருக்கு முன்னுரிமை கொடுத்திருக்கலாம் அதில் தவறே இல்லை வேலை நன்றாக நடந்துமுடிந்ததா இல்லையா என்றுதான் பார்க்க வேண்டும்


M. PALANIAPPAN
ஜன 13, 2025 10:34

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 13, 2025 10:24

பாஜக, அதிமுக இரண்டு கட்சிகளும் ஒரே குட்டையில் ஏமாற்றுதல், லஞ்சம், வரி ஏய்ப்பு ஊறிய மட்டைகள். பாஜக தலைவர் அண்ணாமலையின் மனைவி மற்றும் சகோதரியின் கணவர் பேரில் இருக்கும் சொத்துக்கள், நிறுவனங்களுக்கும் வரி ஏய்ப்பு என்பதால் ரெயிடு சமீபத்தில் நடந்தது


Rajarajan
ஜன 13, 2025 09:49

இன்றைய நவீன அரசியலில், யாரவது ஊழலை ஒழிப்போம், லஞ்சத்தை ஒழிப்போம், என்று கூறினால், அது தான் உச்சகட்ட நகைச்சுவை. நேர்மையாக இருந்தால், ஒரு பந்தல் / ஷாமியானா பொத்தல் இல்லாமல் போட முடியுமா? தொண்டருக்கு ஒரு டீ வாங்கித்தர முடியுமா. இனி எல்லா அரசு ஊழியரின்/ அரசியல்வாதிகளின் வருடாந்திர வரவு செலவு கணக்கு மற்றும் அவர்கள் வரி செலுத்துதலை, மத்திய அரசின் தனி துறை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தால், ஓரளவு குறைய வாய்ப்புண்டு. அதுசரி, திரு. காமராஜர் பற்றி குறை சொல்லித்தானே, தி.மு.க. ஆட்சியை கைப்பற்றியது. ஆனால், திரு. காமராஜர் ஏழை பங்காளன், அவரது பொற்கால ஆட்சி அமைப்போம் என்று இன்றும் தமிழக காங்கிரஸ் சொல்கிறது. தி.மு.க. அன்று கூறியது எல்லாம் தவறு தானே? அப்படியானால், காங்கிரஸ் தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பது தவறு தானே? அல்லது தவறுக்கு துணைபோகும், அப்பேற்பட்ட காங்கிரெஸ்ஸை தாங்களே கலைப்பதில் என்ன தயக்கம் அவர்களுக்கு ??


Velan Iyengaar
ஜன 13, 2025 08:26

கூட்டணி உறுதியாகிவிடும் இப்படி அல்லவா கூட்டணிக்கு வரவைக்க வேண்டும்


கோமாளி
ஜன 13, 2025 07:02

2026க்குள் அதிமுக வை பாஜக கூட்டணிக்கு வர வைக்கனும். அவ்வளவுதான். வேற ஒன்றும் இல்லை..


சம்பா
ஜன 13, 2025 06:07

கப்பம் கட்டிட்டி டால் சரியாகிடும்


புதிய வீடியோ