உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பாம்பன் புதிய ரயில் பாலம் வரலாற்றில் ஒரு மைல் கல்: ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ் பேட்டி

பாம்பன் புதிய ரயில் பாலம் வரலாற்றில் ஒரு மைல் கல்: ரயில்வே அமைச்சர் வைஷ்ணவ் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'பாம்பன் ரயில் புதிய பாலம் வரலாற்றில் ஒரு மைல் கல்' என்ன சென்னை விமான நிலையத்தில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். ராமேஸ்வரம் கடலில் கட்டப்பட்டுள்ள புதிய பாம்பன் ரயில்வே மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று நண்பகல் திறக்கவுள்ளார். பிரதமர் மோடி இலங்கையில் இருந்து நேரடியாக ராமேஸ்வரம் வருகிறார். அதற்கு முன்னதாக, விழா ஏற்பாடுகளை கவனிப்பதற்காக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று சென்னை வந்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=j2nq29dw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அவரை தமிழக பா.ஜ., நிர்வாகிகள் மற்றும் சென்னையில் வாழும் ராஜஸ்தானைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பூங்கொத்து கொடுத்து சால்வை அணிவித்து வரவேற்றனர்,விமான நிலையத்தில் நிருபர்கள் சந்திப்பில் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது: தமிழ் பாரம்பரிய கட்டடக்கலையின் அதிசயமாக பாம்பன் ரயில்வே பாலம் விளங்கும்.பாம்பன் பாலத்தை கட்டி முடிப்பதில் பிரதமர் மோடி மிகுந்த அக்கறை காட்டினார். பாம்பன் ரயில் புதிய பாலம் வரலாற்றில் ஒரு மைல் கல்.பாம்பன் புதிய ரயில் பாலம், இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு பாலம். சிறப்பான பாரம்பரியம் மற்றும் கலைநயத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் இந்திய வரலாற்றில் மிக முக்கியமானது. இவ்வாறு அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Mr Radhakrisnan Radhakrisnan
ஏப் 06, 2025 21:47

வாழ்துக்கள் மோடி அவர்களுக்கு


Nada Rajan
ஏப் 05, 2025 19:17

படம் அருமையாக இருக்கிறது


மீனவ நண்பன்
ஏப் 05, 2025 18:39

பெரியார் பாலம் அல்லது கலைஞர் பாலம் என்று பெயர் வைத்து திராவிடர்களுக்கு மரியாதை செய்யலாம்...


Pandi Muni
ஏப் 05, 2025 21:05

வெளிநாட்டுக்காரன் எவனும் கிடைக்கலையா உனக்கு.


முக்கிய வீடியோ