உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அக்.29ல் விடுப்பு எடுத்து மறியல் ஊராட்சி செயலர்கள் சங்கம் முடிவு

அக்.29ல் விடுப்பு எடுத்து மறியல் ஊராட்சி செயலர்கள் சங்கம் முடிவு

வடமதுரை: துாய்மை காவலர்கள் மாதச்சம்பளத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்துதல், ஊராட்சி செயலர்களை மாநில அரசின் ஓய்வூதிய திட்டத்தில் இணைக் வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அக்.29ல் தற்செயல் விடுப்பு எடுத்து ரோடு மறியல், நவ.24 முதல் வேலை நிறுத்த போராட்டம் செய்வது என தமிழ்நாடு ஊராட்சி செயலாளர் சங்கம் முடிவு செய்துள்ளது. இச்சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் பால சுப்பிரமணி கூறியதாவது: துாய்மை காவலர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் ஊராட்சி மூலம் வழங்க வேண்டும். வட்டார மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களின் பணிக்காலத்தை கருத்தில்கொண்டு வட்டார மாவட்ட அளவில் பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.சுகாதார ஊக்குநர்களுக்கு பணிப்பாதுகாப்பு வழங்கி மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும், 2009 ஜூன் 1 அரசாணை 234ன் படிமக்கள் நலப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு காலமுறை ஊதியத்தை கால முறை ஊதியமாக நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் கம்ப்யூட்டர் உதவியாளர்களை பணி நிரந்தம் செய்ய வேண்டும். ஊராட்சி செயலர்களை ஓய்வூதிய திட்டத்தில் இணைத்து ஒன்றிய அலுவலக பதிவறை எழுத்தருக்குரிய சலுகைகள் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்.29ல் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் ரோடு மறியல், நவ.29 முதல் சென்னை இயக்குனரகத்தில் தொடர் காலவரையற்ற வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டமும் நடத்த சங்கம் முடிவு செய்துள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை