உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருச்சி மாநகராட்சியுடன் இணைய மறுக்கும் ஊராட்சிகள்: அரசு அதிகாரிகள் அதிர்ச்சி

திருச்சி மாநகராட்சியுடன் இணைய மறுக்கும் ஊராட்சிகள்: அரசு அதிகாரிகள் அதிர்ச்சி

திருச்சி: திருச்சி மாநகராட்சியுடன் இணைய மறுத்து கிராம மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதால், அரசு உத்தரவை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கலாமா, என அரசுத்துறை அதிகாரிகள் திணறுகின்றனர்.திருச்சி மாநகராட்சியில் தற்போது, 65 வார்டுகள் உள்ளன. அதை, நுாறு வார்டுகளாக உயர்த்த திட்டமிட்டு, திருச்சி மாநகரை ஒட்டியுள்ள கிராம பஞ்., பகுதிகளை, மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டு, கடந்த சில வாரங்களுக்கு முன், 21 கிராம பஞ்.,சில் உள்ள கிராமங்களை, திருச்சி மாநகராட்சியுடன் இணைத்து, தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இது, கிராம மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தங்களை கேட்காமல், பஞ்., தலைவர்களின் ஒப்புதலை மட்டும் வைத்துக் கொண்டு, எப்படி தங்கள் பகுதியை மாநகராட்சியோடு இணைக்கலாம் என்று அதிர்ச்சி அடைந்தனர்.மாநகராட்சியோடு இணைவதால், 100 நாள் வேலை வாய்ப்பு, தொகுப்பு வீடுகள் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது, வரிகள் உயரும் என்பதால், இதற்கு இணைக்கப்பட்ட கிராம பஞ்.,களில் உள்ள கிராம மக்கள் கடந்த, ஒரு மாதமாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். குமாரவயலுார், அதவத்துார், அல்லித்துறை, சோமரம்பேட்டை, குண்டூர், நெருஞ்சலக்குடி, வாளாடி, தாளக்குடி, கீழக்குறிச்சி உள்பட, அனைத்து இணைக்கப்பட்ட கிராம பஞ்.,களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.அரசு தரப்பில், இணைப்புக்கு ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் என்று கூறி, 6 மாதம் அவகாசம் அளித்திருந்தாலும், அரசாணை வெளியிடப்பட்டு விட்டதால், இணைப்பு உறுதியாகும் என்று கிராம மக்கள் நினைத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவோ, கிராம மக்களின் ஒப்புதல் இல்லாமல், இணைப்பு நடக்காது என்று கூறுகிறார்.அரசாணை வந்து விட்டதால், இதை மக்கள் நம்ப தயாரில்லை. இது ஒருபுறம் இருக்க, அரசாணை வெளியிடப்பட்டு விட்டதால், கிராம பஞ்.,களை, மாநகராட்சியுடன் இணைக்கும் பணிகளை துவக்கலாமா, வேண்டாமா என்று, மாநகராட்சி, வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.இதற்கு, தமிழக அரசு தெளிவான அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற கிராம மக்களும், அரசுத்துறை அதிகாரிகளும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

தமிழ்வேள்
ஜன 14, 2025 21:49

எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் ஊராட்சி பகுதியினராக இருந்தாலும் விலைவாசி கட்டணங்கள் வீட்டு வாடகை எல்லாம் மாநகராட்சி அளவுக்கு அதிகமாக உள்ளது..அப்புறம் இணைய மறுப்பது ஏன்? எல்லோருக்கும் நூறு நாள் வேலை தொகுப்பு வீடு கிடைக்காது.. திராவிட திருட்டு கட்சிக்காரனாக இருந்தாலும் மந்திரி கும்பலை கவனித்தால்தான் கிடைக்கும்.. அப்புறம் என்ன? கேள்வி கேட்காமல் மாநகராட்சி ஆக்கி விடலாம்.தவறே இல்லை


Ram pollachi
ஜன 14, 2025 17:37

நகரின் உள்ளே இருந்த பல மக்கள் இப்போது நகருக்கு வெளியே பிரம்மாண்டமாக வீடு, அடுக்கு மாடி குடியிருப்பு, கல்வி நிறுவனங்கள், மருத்துவமனை, திருமண மண்டபம் கட்டி கொழுத்த வாடகை வாங்கி வருமானம் பார்ப்பதை அரசு நிர்வாகம் வேடிக்கை பார்க்க தயார் இல்லை.... கோவை மாநகராட்சி உடன் மலுமிச்சம் பட்டி ஊராட்சி இணைப்பதை கண்டித்து இரண்டு நாட்கள் முன் பொதுமக்கள் ஆர்பாட்டம் நடத்தினார்கள். எல்லாம் அரசியல் பின்புலம்.


Nandakumar Naidu.
ஜன 14, 2025 13:03

நகராட்சி என்றால் நாறடித்து விடுவார்கள் என்று பயம். 4 லட்சம் கோடி கடன் வீணாய்ப்போன விளங்காத விடியல் ஆட்சியில் 8.5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. தெரிந்து கொள்வோம் மக்களே.


karthik
ஜன 14, 2025 12:15

ஆமாம் இவனுங்க இஷ்டத்திற்கு கடன் வாங்கவும், வரிகளை ஏற்றவும் திட்டம் போட்டு ஒரு வளர்ச்சியும் இல்லாத பகுதிகளை மாநகராட்சி என்று காகிதங்களில் மாற்றிவிட்டு...மக்களை விதைக்கிறார்கள்.. கேடு கெட்டவர்கள்.


Chandrasekaran
ஜன 14, 2025 10:05

கரூர் தடத்திலுள்ள கம்பரசம்பேட்டை முத்தரசநல்லூர் கிராம மக்கள் சுமையை ஏற்கத் தயாராகி உள்ளனர் எனத் தெரிகிறது. பாவம் வளர்ச்சி எதையும் காணப் போவதில்லை. விவசாய நிலங்களுக்கு நீர்வரத்தைந் தடுத்து விவசாயத்தை விட்டுவிட்டதால் போராட விவசாயிகள் இல்லை எனத் தெரிகிறது. சிலர் நிலத்தடி நீரை நம்பி உள்ளனர் அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படப்போகிறது. வீணாப் போக தானா வரும் மமக்கள்.


முருகன்
ஜன 14, 2025 09:21

வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும்


Mohan
ஜன 14, 2025 08:05

எதற்கு மாநகராட்சி? கவுன்சிலர்கள் பல விதத்திலும் பகல் கொள்ளை அடிக்கலாம் அதற்குத்தான். திருச்சி ஏற்கனவே நாத்தமாய் நாறுகிறது. திராவிட விடியல்களின் ஊழல் ஆட்சியால் மணல் கொள்ளை ஓஹோன்னு நடக்குது. இந்த ஊராட்சிகளையும் சேர்த்துகிட்டா அகண்ட காவேரியை ""அண்டா காகசம்"" பண்ணி தங்களது வாரிசுகளுக்கு ஆயிரம்,லட்சம் கோடிகளை சேர்த்துவைக்கலாம். அதிலிருந்து 5 வருடத்திற்கு ஒருமுறை க, மக்களுக்கு கிள்ளிக் கொடுத்து ஓட்டுகளை வாங்கி நிரந்தர ஆட்சி செய்யலாம். இதுதானே பிளான்?. திராவிட விடியல்களுக்கு எச்சரிக்கை சத்தம் போடாமல் ஓட்டு போடும் அமைதி மார்க்கமும், பிச்சை போடும் ஜெபிப்பவர்களும், தங்கள் சொந்த ஆட்சி அமைய, உங்களை ஆட்சியிலிருந்து அகற்றும் அளவு அதிகாரம் பெறும் நாள் வெகு தூரத்தில் இல்லை கபர்தார்


Mahendran Puru
ஜன 14, 2025 09:47

தமிழின தமிழக விரோதி பாஜக ஆட்சியில் மதுரை தூத்துக்குடி ரயில் பாதை கட்டுவது ரத்து செய்துவிட்டு மாநில ஆட்சிமேல் பொய்யான குற்றச்சாட்டு வைக்கிறது மத்திய ஆளும் கட்சி.


KRISHNAN R
ஜன 14, 2025 07:50

ரியல் எஸ்டேட் development அதே அதே...


R.RAMACHANDRAN
ஜன 14, 2025 07:38

வேலையே செய்யாமல் கூலி வாங்கும் நூறு நாள் வேலை திட்டம் நகர் புறங்களில் செயல்படுத்தாமல் இருப்பதால் மற்றும் கட்டிடங்கள் கட்ட அனுமதி வாங்க வேண்டும் என்பது கிராமங்களுக்கும் பொருந்தும் என்பதை அமல்படுத்ததால் கணக்கில் காட்டாத பணத்தை வைத்து வீடு கட்டிக்கொண்டிருப்பது தடை படும் என்பதால் இந்த போராட்டம்.


nv
ஜன 14, 2025 07:08

திருட்டு திராவிட மாடலின் அடுத்த அவலம்!! மக்கள் இன்னும் இவர்களுக்கு வாக்களித்தால் சர்வாதிகார ஆட்சி வரும் அபாயம் தமிழகத்திலே


சமீபத்திய செய்தி