உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆப்பரேஷன் வி- பண்ருட்டி மூவ்; விஜய் அணியில் பன்னீர், அன்புமணி?

ஆப்பரேஷன் வி- பண்ருட்டி மூவ்; விஜய் அணியில் பன்னீர், அன்புமணி?

த.வெ.க., தலைவர் விஜய் தலைமையில், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், பா.ம.க., தலைவர் அன்புமணி இணைந்து, புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1i3x4uxi&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வரும் 2026 சட்டசபை தேர்தலுக்கு, இன்னும் எட்டு மாதங்கள் இருக்கும் நிலையில், தி.மு.க., கூட்டணி அப்படியே உள்ளது. கடந்த ஏப்ரல் 11ல் அறிவிக்கப்பட்ட அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில், இதுவரை வேறு கட்சிகள் இணையவில்லை. த.வெ.க., தலைவர் விஜய், 'கூட்டணி ஆட்சி; ஆட்சியில் பங்கு' என்ற முழக்கத்துடன், கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் பிடிவாதத்தால், பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா ஆகியோர், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணியில் இணைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கண்டித்து அறிக்கை சில நாட்களுக்கு முன், சென்னை வந்த பிரதமர் மோடியை வரவேற்க நேரம் கேட்டு, கனிவான வார்த்தைகளுடன் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார். ஆனாலும், அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதையடுத்து மத்திய அரசைக் கண்டித்து, நேற்று அறிக்கை வெளியிட்டு, பா.ஜ.,வுக்கு எதிராக திரும்பியுள்ளார். இதனால், தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணிக்கு மாற்றாக, த.வெ.க., தலைவர் விஜய் தலைமையிலான கூட்டணியில் இணைய பன்னீர்செல்வம், தினகரன் ஆகியோர் தயாராகி விட்டதாக, அவர்களது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., காலத்திலிருந்து, அரசியலில் இருக்கும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், த.வெ.க., கூட்டணியில், பன்னீர்செல்வம், தினகரன் மட்டுமல்லாது, பா.ம.க., தலைவர் அன்புமணி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரையும் இணைத்து, 'மெகா கூட்டணி' அமைக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. 2026 தேர்தல் களம் இதற்கு, த.வெ.க., தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியும் ஆதரவு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு, 'ஆப்பரேஷன் வி' என, பெயரிட்டுள்ளதாகவும் தெரிகிறது. அப்படியொரு கூட்டணி அமைந்தால், '2026 சட்டசபை தேர்தல் களம், தி.மு.க., - த.வெ.க., என மாறி விடும்' என, ராமச்சந்திரன் பேசி வருவதாக, பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். த.வெ.க.,வுடன் கூட்டணி உறுதியானால், ஏற்கனவே, தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டுள்ள, எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க., என்ற பெயரில், பன்னீர்செல்வம் தனி கட்சி துவங்குவார் என்றும் கூறப்படுகிறது. பெரியகுளத்திலிருந்து இன்று சென்னை வரும் பன்னீர்செல்வம், உட்லண்ட்ஸ் ஹோட்டலில் ஆதரவாளர்களுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார். அதன்பின், முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என, அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

G.B.MAHESWARAN
ஜூலை 30, 2025 18:59

இது தவறான தகவல்...?


saravan
ஜூலை 30, 2025 16:58

எப்படியோ ஒரு கூத்தாடி அரசியல் அனுபவமில்லாத ஒரு சின்னப்பயளுக்கு முடிவெடுத்தால் இதற்க்கு உங்களுக்கு ஒரு கட்சி தேவையா வெட்கமாக இல்லையா இப்படியும் பிழைக்கணுமா


உண்மை கசக்கும்
ஜூலை 30, 2025 15:04

அண்ணாமலை பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் தங்க மெடல் வாங்கிய பண்ருட்டி அறிவாளி ஆனால் ...


பிரேம்ஜி
ஜூலை 30, 2025 14:16

பண்ருட்டியார் இன்னமும் இருக்கிறாரா........... அரசியலில்? இவ்வளவு நாள் ஆளையே காணோம்!


Dr.Joseph
ஜூலை 30, 2025 13:44

ஐயோ அரசியல் ஆனாதை பண்ருட்டி புகுந்த இடம் பாழாய் போய்விடுமே.....


Kulandai kannan
ஜூலை 30, 2025 13:08

பண்ருட்டி சேர்ந்த இடம் உருப்படாது. 90களில் பா.ம.க, 2000களில் தேமுதிக.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 30, 2025 12:59

சேர்த்ததை வைத்து திருப்தியுடன் ஓ பி எஸ் அரசியலில் இருந்து விலகினால் இருக்கும் மானம், மரியாதையைக் காப்பாற்றிக்கொள்ளலாம் ........


Subburamu Krishnasamy
ஜூலை 30, 2025 11:17

Just a political drama. Let us enjoy Tamizhagam politics Upto May 2026 , we can see more comedy drama in Tamizhagam


RAVINDRAN.G
ஜூலை 30, 2025 10:05

புதிய கூட்டணி அமைந்தால் இரு திராவிட கட்சிகளுக்கும் மூடுவிழாதான். திருமாவளவன் கம்யூனிஸ்ட் காங்கிரஸ், மதிமுக சேர்ந்தால் ஜெயிக்க நல்ல வாய்ப்பு


V RAMASWAMY
ஜூலை 30, 2025 09:22

இ பி எஸ்ஸின் பிடிவாதம் தான் காரணம்.