உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சட்டப்போராட்டம் தொடரும்; பன்னீர் செல்வம் உறுதி

சட்டப்போராட்டம் தொடரும்; பன்னீர் செல்வம் உறுதி

பெரியகுளம், : ''அ.தி.மு.க.,வை தொண்டர்களிடம் ஒப்படைக்கும் வரை சட்டப்போராட்டம்தொடரும்''என முன்னாள் முதல்வர்பன்னீர்செல்வம் பேசினார்.தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி பண்ணை வீட்டில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்அணி சார்பில் பிப்.24ல் முன்னாள் முதல்வர் ஜெ., பிறந்தநாள் விழா கொண்டாடுவது குறித்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. பன்னீர்செல்வம் பேசியதாவது: ஜெ., பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். அன்றைய தினம் அ.ம.மு.க., சார்பில் தேனியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் அக் கட்சி பொதுச்செயலாளர் தினகரன் பங்கேற்கிறார். எனக்கு அழைப்பு கொடுத்துள்ளார். அ.தி.மு.க., வை தொண்டர்களிடம் ஒப்படைக்கும் வரை சட்டப்போராட்டம் தொடரும். தற்போது வந்துள்ள தீர்ப்பு தற்காலிகமானது. இனி வரும் தீர்ப்பு நல்ல தீர்ப்பாக அமையும். தேனி லோக்சபா தொகுதியில் நாம் போட்டியிடுகிறோம். எனவே தேர்தலில் போட்டியிட விருப்பமுள்ளவர்கள் மனுவை என்னிடம் கொடுக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி