உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கவர்னர் எதை சொன்னாலும் குற்றம் தி.மு.க., மீது பன்னீர்செல்வம் கோபம்

கவர்னர் எதை சொன்னாலும் குற்றம் தி.மு.க., மீது பன்னீர்செல்வம் கோபம்

சென்னை: 'கவர்னர் எதை சொன்னாலும், அதில் குற்றம் கண்டுபிடித்து, அவரை விமர்சிப்பதை, தி.மு.க., வாடிக்கையாகக் கொண்டிருக்கிறது' என, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:சென்னை அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் பேசும்போது, 'கவர்னரை மாற்றாதீர்கள் என, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் வேண்டுகோள் வைப்பதாகவும், அப்போதுதான் தி.மு.க.,வுக்கு ஆதரவு அதிகமாகிறது' என கூறியுள்ளார்.தி.மு.க.,வின் கொள் கையற்ற சாதனைகளால், ஆட்சியை பிடிக்க முடியாது என்பதை, முதல்வர் ஸ்டாலின் நன்கு தெரிந்து வைத்திருப்பது தெரிகிறது. உண்மைக்கு மாறான தகவல்களை மக்களிடம் கூறி, குறுக்கு வழியிலும் தி.மு.க., ஆட்சியை பிடிக்க முடியாது என்பதுதான் கள யதார்த்தம். தி.மு.க.,வுக்கான ஆதரவு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே செல்கிறது. வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., ஆட்சியை இழக்கும். எந்த வழியிலும், தி.மு.க., வெற்றி பெற முடியாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை