மேலும் செய்திகள்
தி.மலையில் தரிசனத்துக்கு 6 மணி நேரம் காத்திருப்பு
50 minutes ago
சென்னை:திருவள்ளூர் அடுத்த ஊத்துக்கோட்டையைச் சேர்ந்தவர் மூர்த்தி, 56. இவரது மனைவி ஏசம்மாள், 50. இவர்களுக்கு, மூன்று மகன்கள் உள்ள நிலையில், பிளஸ் 2 படித்து வந்த கேசவன் என்ற மகன், கடந்த 2011ம் ஆண்டு, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் காணாமல் போனார்.இது குறித்து, கடந்த 2011ம் ஆண்டு கோயம்பேடு காவல் நிலையத்தில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.மேலும், தங்களது மகன் குறித்த தகவலை கேட்டறிய, அவரது பெற்றோர் கடந்த 13 ஆண்டுகளாக கோயம்பேடு காவல் நிலையத்திற்கு அடிக்கடி வந்து செல்கின்றனர்.இந்த நிலையில், நேற்று மூர்த்தியை தொடர்பு கொண்ட கோயம்பேடு போலீசார், மகன் குறித்து பேச வேண்டும்; காவல் நிலையம் வருமாறு அழைத்துள்ளனர். 'மகன் கிடைத்து விட்டான்' என்ற சந்தோஷத்தில், மூர்த்தியும் காவல் நியைத்திற்கு சென்றுள்ளார். அங்கு, நீண்ட நேரம் காத்திருந்த மூர்த்தியிடம், அவரது மகன் கிடைத்து விட்டால் தகவல் தெரிவிப்பதாக போலீசார கூறியதால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கண்ணீருடன் வீடு திரும்பினார்.
50 minutes ago