உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பொருளாதார நெருக்கடியில் பகுதி நேர ஆசிரியர்கள்; ஊதியம் வழங்க அரசுக்கு சீமான் வேண்டுகோள்

பொருளாதார நெருக்கடியில் பகுதி நேர ஆசிரியர்கள்; ஊதியம் வழங்க அரசுக்கு சீமான் வேண்டுகோள்

சென்னை: தீபாவளிக்கு முன்பே, அரசுப் பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு நவம்பர் மாத ஊதியம் மற்றும் ஊக்கத்தொகையை தி.மு.க., அரசு வழங்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தி உள்ளார்.இது குறித்து, சீமான் கூறியதாவது: கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வாக்குறுதி அளித்தபடி, தி.மு.க., அரசு பகுதிநேர ஆசிரியர்களைப் பணிநிரந்தரம் செய்திருந்தால், தற்போது இதர அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்குக் கிடைக்கின்ற அனைத்து உரிமைகளும் பகுதி நேர ஆசிரியர்களுக்கும் கிடைத்து இருக்கும். ஆனால் ஆட்சிக்கு வந்து மூன்றரை ஆண்டுகளைக் கடந்தும் திமுக அரசு பணி நிரந்தரம் செய்ய மறுப்பது பகுதி நேர ஆசிரியர் பெருமக்களுக்குச் செய்கின்ற பெருந்துரோகமாகும். அதனால் தற்போது கிடைக்கின்ற 12,500 ரூபாய் ஊதியத்தால் பெரும் பொருளாதார நெருக்கடியில் பகுதிநேர ஆசிரியர்கள் சிக்கித்தவித்து வருகின்றார்கள். ஆகவே, 13 ஆண்டுகளாகப் பணிநிரந்தரம் கேட்டு போராடி வருகின்ற 12000க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். நவம்பர் மாத ஊதியம் மற்றும் விழாக்கால ஊக்கத்தொகையை தீபாவளிக்கு முன்பே வழங்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தாமரை மலர்கிறது
அக் 23, 2024 23:14

ஆசிரியர்களின் போராட்டத்திற்கு பயந்து, அளவுக்கு அதிகமான சம்பளத்தை ஆசிரியர்களுக்கு கொடுத்தால், இது தான் நடக்கும். முழுநேர ஊழியர்களை அமர்த்தமுடியாமல் பகுதிநேர ஆசிரியர்களை வைத்துக்கொண்டே குப்பைகொட்ட நேரிடும். இது அவர்களின் வாழ்க்கையையும் பாதிக்கும். ஆடு மாடு மேய்ப்பவரையெல்லாம் அரசு பணியாளர் ஆக்குவேன் என்று சவடால் விடுகின்ற சீமான் அறிவுரை கூறுவது தான் ஆச்சரியமாக உள்ளது. சீமானுக்கு உள்ள மூளைக்கு, அவர் வியாழன் கிரகத்திற்கு அதிபர் ஆகவேண்டியவர். என்ன பாவம் செய்தாரோ, தெரியவில்லை தமிழகத்தில் பிறந்துவிட்டார் . அவரின் தம்பிகள் அப்படியே அண்ணனின் மூளையை கண்டு மெச்சி மெய்சிலிர்த்து போய் உள்ளார்கள். ஆரம்பத்தில் இப்படித்தான் சிலிர்த்து போய் இருப்பார்கள். ரொம்பநாள் சிலிர்த்துக்கொண்டே இருக்கமுடியாது அல்லவா. விரைவில் மனம் முதிர்ச்சி அடைந்து வேறு கட்சிக்கு ஓடிவிடுவார்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
அக் 23, 2024 21:40

ஊதியம், பென்ஷனுக்கெல்லாம் பணம் இல்லை ..... பேனாவுக்கு சிலை .... அதுக்கு சிலை ...... இதுக்கு சிலை ...... இதுக்கெல்லாம்தான் பணம் இருக்குது .......


karupanasamy
அக் 23, 2024 15:17

எல்லாப்பக்கமும் கையேந்துறார் கடேசில ஆளும்கட்சியை கையில பன்னீர் பாட்டிலுடன் போய் சந்திச்சுடுவார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை