உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் 13 ஆண்டு காத்திருப்பு; ஆட்சி மீது வெறுப்பு

பணி நிரந்தரம் கோரி பகுதி நேர ஆசிரியர்கள் 13 ஆண்டு காத்திருப்பு; ஆட்சி மீது வெறுப்பு

பணி நிரந்தரத்துக்காக போராடி வரும் பகுதிநேர ஆசிரியர்கள், வரும் பட்ஜெட்டிலாவது சாதகமான அறிவிப்பு வெளியாகும் என காத்திருக்கின்றனர்.தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களாக, 3,700 உடற்கல்வி, 3,700 ஓவியம், 2,000 கணினி அறிவியல், 1,700 தையல், 300 இசை, 20 தோட்டக்கலை, 60 கட்டடக்கலை, 200 வாழ்வியல்திறன் கல்வி என, 12 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர்.இவர்களுக்கு மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன், ஒருங்கிணைந்த கல்வி திட்டத்தில் துவக்கத்தில், 5,000 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2014, 2017, 2021, 2024ம் ஆண்டுகளில் அளிக்கப்பட்ட சம்பள உயர்வு காரணமாக, தற்போது, 12,500 ஊதியம் பெறுகின்றனர்.2012ம் ஆண்டு முதல், தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, பலகட்ட போராட்டங்கள் நடத்தி விட்டனர். அரசு செவி சாய்க்காததால், பொருளாதார ரீதியாக சிரமங்களை சந்திப்பதாக கொந்தளிக்கின்றனர்.பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின், மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:2016 மற்றும், 2021 தேர்தல்களில், பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக, தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தது. இதுவரை நிறைவேற்றவில்லை. மே மாத சம்பளம், மருத்துவ காப்பீடு என, எந்த சலுகையும் வழங்காததால் வெறுத்துப்போனது.பள்ளிக் கல்வி அமைச்சர் மகேஷ், 10 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என தெரிவித்தார்; அதுவும் வெறும் அறிவிப்பாகவே உள்ளது. எங்கள் குடும்ப வாழ்வாதாரம் உயர, வரும் பட்ஜெட்டில் காலமுறை சம்பளம் வழங்க நிதி ஒதுக்க வேண்டும். 13 ஆண்டு தற்காலிகப் பணியை நிரந்தரமாக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். - நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ