| ADDED : ஆக 24, 2011 12:27 AM
ராமநாதபுரம் : பார்த்தீனியம் செடிகளை அழிக்க 'மெக்ஸிகன்' வண்டுகளை, பயன்படுத்த தமிழக அரசு அறிவுறுத்தி உள்ளது. இதையடுத்து நச்சுக்களைகள் ஒழிப்பு இயக்கம் மூலம் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. பார்த்தீனியம் செடியால் ஆஸ்துமா, தொழுநோய், சுவாசம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும். இந்த செடி ஒரு முறை உற்பத்தியாகி விட்டால், மழை, வறட்சியை தாங்கி வளரும் தன்மை உடையது. இதன் மகரந்த தூள் காற்று மண்டலத்தில் ஆண்டு முழுவதும் காணப்படும். இவற்றை ஒழிக்க மழை காலத்தில் உற்பத்தியாகி, பெருகும் மெக்ஸிகன் வண்டுகளை சேகரித்து, பார்த்தீனியம் மிகுந்த பகுதிகளில் பரவ விட்டு இந்த செடிகளை அழிக்கலாம். பார்த்தீனியம் வளரும் இடங்களில், அட்ரஸின், 24 டி, கிளைபோசேட் மற்றும் மெட்ரிபூசன் களைக் கொல்லிகளை பயன்படுத்த வேண்டும் எனவும் மாவட்ட வேளாண் அலுவலர்கள் விவசாயிகளிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.