உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாளை அன்புமணி தலைமையில் கட்சிக் கூட்டம்; பா.ம.க., தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதி

நாளை அன்புமணி தலைமையில் கட்சிக் கூட்டம்; பா.ம.க., தலைவர்கள் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நாளை (ஜூன் 19) அன்புமணி தலைமையில் சேலத்தில் கட்சிக் கூட்டம் நடக்க உள்ள நிலையில், பா.ம.க., முக்கிய தலைவர்கள் நெஞ்சு வலி காரணமாக அடுத்தடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பேசு பொருளாகியுள்ளது.பா.ம.க., நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து நீக்கிய ராமதாஸ், இனி உயிர் இருக்கும் வரை பா.ம.க.,வின் தலைவர் பொறுப்பை தானே வகித்துக் கொள்வேன் என்று தீர்க்கமாக கூறி விட்டார். இதையடுத்து, பா.ம.க.,வில் இரு கோஷ்டிகள் உருவெடுத்துள்ளது. இதில், அன்புமணி பக்கமே அதிக நிர்வாகிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது ராமதாஸூக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=diedew9y&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த சூழலில், அன்புமணி தலைமையில் நாளை சேலத்தில் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில், அன்புமணியின் ஆதரவாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், சேலம் மேற்கு தொகுதி பா.ம.க., எம்.எல்.ஏ., அருள் நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, தற்போது, பா.ம.க., கவுரவத் தலைவர் ஜி.கே., மணியும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சேலம் மற்றும் தருமபுரி மாவட்ட கட்சி பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க, அன்புமணி நாளை சேலம் செல்ல உள்ள நிலையில், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் தற்போது பேசு பொருளாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

sankaranarayanan
ஜூன் 18, 2025 18:55

பாட்டாளி மக்கள் கட்சி என்றபெயர் போயி விரைவிலேயே பாட்டாளி மருத்துமனை மக்கள் கட்சி என்றே ஆகிவிடும் போலிருக்கிறது


D.Ambujavalli
ஜூன் 18, 2025 18:14

அப்பா மகன் போட்டியில் தலையைக் கொடுத்து பிரசினையை விலைக்கு வாங்குவானேன் என்று உஷாராக மருத்துவமனையை தஞ்சம் அடைந்த சமர்த்து, சாமர்த்தியத்துக்கு ஒரு சபாஷ்


Kumar Kumzi
ஜூன் 18, 2025 17:49

பழுத்த மாம்பழம் திருட்டு திராவிஷ தீமுகாவிடம் சரணடைந்துவிட்டது


vee srikanth
ஜூன் 18, 2025 17:03

கைதுன்னா சொன்னா தானே மருத்துவமனைக்கு போவாங்க இது புது விதமாக இருக்கு


சந்திரசேகரன்,துறையூர்
ஜூன் 18, 2025 17:38

இந்த ஜி.கே.மணியெல்லாம் பக்கா திமுகவின் இதுவரை அவர் திமுகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசியது இல்லை. இவரையெல்லாம் கட்சியில் வைத்திருப்பது வேஸ்ட்...


HoneyBee
ஜூன் 18, 2025 16:31

அப்ப சீக்கிரம் அழிந்து போவாங்க. அவுங்க அவுக அடிச்சிகிட்டு முடியும் இந்த ஆட்டம்


சிட்டுக்குருவி
ஜூன் 18, 2025 16:28

கடந்த 40 ஆண்டுகளில் சாதிக்காததை இனிமேலுமா சாதிக்கபோகிண்றீர்கள் .ஏதாவது ஒரு தேசிய நீர்ரோட்ட்டத்தில் கலந்திடுவீர் .நாட்டுக்கு பயனளிக்கும் .


Manaimaran
ஜூன் 18, 2025 16:21

எதுக்கு பொல்லாப் புனு தான் வேற ஒண்ணுமில்ல


V K
ஜூன் 18, 2025 15:44

கட்சியே ஐ சி யூ வில் இருக்கும் பொழுது தொண்டர்களும் குண்டர்களும் அங்கு தானே இருப்பார்கள்