ஆதிதிராவிட மாணவர் தேர்ச்சி விகிதம் உயர்வு
சென்னை:'அரசின் சீரிய முயற்சிகளால் ஆண்டுதோறும் ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருகிறது' என, ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக, தி.மு.க., அரசு பொறுப்பேற்ற நாள் முதல், பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமாக, தன்னாட்சி அதிகாரத்துடன் கூடிய மாநில ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் அமைக்கப்பட்டது. ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் செயல்படும் இவ்வாணையத்தின் வாயிலாக, தற்போது வரை, 3,695 மனுக்கள் பெறப்பட்டு, 2,945 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அரசின் சீரிய முயற்சிகளால், ஆண்டுதோறும் ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம், அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.